ஜோதிகாவின் ரியல் மகளும் ரீல் மகளும் என்னம்மா பேசிக்கிறாங்க.. வேறலெவலில் டிரெண்டாகும் வீடியோ!
சென்னை: சூர்யா மற்றும் ஜோதிகாவுக்கு இந்த மாதம் சூப்பர் மாதமாக அமைந்துள்ளது. சூர்யாவின் கருப்பு திரைப்படம் 300 கோடி வசூல் செய்து மெகா பிளாக்பஸ்டர் ஆகியுள்ளது. இந்த ஆண்டு இதுவரை வெளியான படங்களிலேயே கருப்பு திரைப்படம் தான் அதிக வசூலை ஈட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அப்படியே கட் பண்ணா ஓடிடியில் ஜோதிகா, சோனாக்ஷி சின்ஹா நடித்த சிஸ்டம் திரைப்படம் இந்திய ஓடிடி ரசிகர்களை ரொம்பவே கவர்ந்துள்ளது. இருவரும் சட்டத் துறையில் உள்ள பிரச்னைகள் குறித்து படமெடுத்து அடுத்த அடுத்த வாரங்களில் வெளியிட்டு வரவேற்பை பெற்றுள்ளனர் என்பதும் கூடுதல் தகவல்.

ஜோதிகாவின் சிஸ்டம் படத்தில் அவருக்கு ரீல் மகளாக நடித்த இளம் நடிகையும் ஜோதிகாவின் மகள் தியாவும் தியேட்டரில் பேசிக்கொள்ளும் வீடியோ ஒன்று சோஷியல் மீடியாவில் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
விஜய் மகனை போலவே: முதலமைச்சராக மாறியுள்ள நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கிய சிக்மா திரைப்படம் ஜூலை 31ம் தேதி வெளியாகிறது. சூர்யா மற்றும் ஜோதிகாவின் மகளான தியாவும் இயக்குநராகவே படித்துள்ளார். ஏற்கனவே அவர் இயக்கிய ஆவணப்படம் மிகப்பெரிய அளவில் பாராட்டுக்களை அள்ளியது. கூடிய சீக்கிரமே அவரும் படங்களை இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிஸ்டம் சக்சஸ்: சூர்யாவுக்கு கருப்பு திரைப்படம் மெகா பிளாக்பஸ்டர் ஆன நிலையில், ஜோதிகாவுக்கும் ஓடிடியில் அவர் நடித்த சிஸ்டம் திரைப்படம் சக்சஸ் ஆக மாறியுள்ளது. அதன் நிகழ்ச்சிகளுக்கு தனது மகள் தியா மற்றும் மகன் தேவ் உள்ளிட்டோரையும் ஜோதிகா அழைத்துச் சென்று பாலிவுட் ரசிகர்கள் முன்பாக அறிமுகப்படுத்தி வைத்தார்.
ரீல் மகளுடன் ரியல் மகள்: சிஸ்டம் படத்தில் மாற்றுத்திறனாளி கணவர் மற்றும் நன்றாக படிக்கக் கூடிய அறிவாளி மகளுக்கு அம்மாவாக ஜோதிகா நடித்திருப்பார். ஜோதிகாவின் ரீல் மகளாக ஆஸ்ரியா மிஸ்ரா நடித்த நிலையில், மல்டிபிளக்ஸ் தியேட்டர் ஒன்றில் ஜோதிகாவையும் அவரது மகள் தியாவையும் சந்தித்த ஆஸ்ரியா மிஸ்ரா தியாவுடன் செம ஜாலியாக பேசிக்கொண்டிருக்கும் வீடியோ ஒன்றை ரசிகர்கள் அதிகளவில் ஷேர் செய்து வருகின்றனர்.
லைம் லைட்டில் வாரிசுகள்: விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராகவும் விக்ரமின் மகன் துருவ் ஹீரோவாகவும் சினிமாவில் கால் பதித்து விட்டனர். சூர்யாவின் மகள் தியா, அஜித் மகள் அனோஷ்கா உள்ளிட்டோரும் சமீப காலமாக லைம் லைட்டில் மீடியா வெளிச்சம் படும்படி தென்பட தொடங்கியுள்ளனர்.


Click it and Unblock the Notifications