தனுஷ் ரொம்ப பாவம்.. தினமும் ஏதோ சர்ச்சை.. இதுல “காந்தா” பட நடிகை என்ன சொன்னாங்க தெரியுமா?
சென்னை: இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், துல்கர் சல்மான், சமுத்திரக்கனி, ராணா டகுபதி, பாக்கியஸ்ரீ போர்ஸ் ஆகியோர் நடித்த திரைப்படம் காந்தா. பான் இந்திய திரைப்படமாக தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியான இப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இப்படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்த பாக்யஸ்ரீ போர்ஸ் நடிகர் தனுஷ் குறித்து பேசி இருக்கிறார்.
வளர்ந்து வரும் நடிகையாக இருக்கும் நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ், காந்தா படத்தை தொடர்ந்து,
மகேஷ் பாபு இயக்கத்தில் உருவாகி உள்ள 'ஆந்திரா கிங் தாலுகா' என்ற படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். ராம் பொதினேனி கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில், உபேந்திரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படம் வருகிற 28-ம் தேதி தியேட்டரில் வெளியாக உள்ளது.

ரொம்ப ஆசை: இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் தனுஷ் குறித்து பேசி உள்ள இவர், எனக்கு தனுஷ் சாரை ரொம்பப் பிடிக்கும். அனைத்து நடிகைகளுமே தனுஷுடன் பணியாற்ற வேண்டும் என்று தான் ஆசைப்படுவார்கள். எனக்கும் அவருடன் சேர்ந்து நடிக்க ஆசையாக உள்ளது. விரைவில் அவருடன் சேர்ந்து நடிக்க வாய்ப்பு வரும் என நம்புகிறேன் என்று கூறியுள்ளார். இந்த பேட்டியை பார்த்த தனுஷின் ரசிகர்கள், நீ வேற சும்மா இருமா.. ஏற்கனவே தனுஷ் பற்றி எந்த செய்தி வந்தாலும், இதை ஊதி ஊதி பெரிதாக்கிவிடுகிறார்கள். இதில், நீங்கள் அவருடன் நடிக்க ஆசைப்படுவதாக சொல்லியதைக்கூட சர்ச்சையாக்கிவிடுவார்கள் என ரசிகர்கள் இணையத்தில் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். மேலும் சில ரசிகர்கள் அவருடன் சேர்ந்து நடிக்காமல் இருப்பதே நல்லது என கூறியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











