»   »  சாத்துக்குடி கார்த்திகா!

சாத்துக்குடி கார்த்திகா!

Subscribe to Oneindia Tamil
தூத்துக்குடி நாயகி சாத்துக்குடி கார்த்திகாவுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவியஆரம்பித்துள்ளன.

டான்ஸ் மாஸ்டர் ஹரிக்குமாரின் நடிப்பு மற்றும் தயாரிப்பில் வெளியான படம்தூத்துக்குடி. இதில் அவருக்கு ஜோடியாக நடித்தவர்தான் கார்த்திகா.

மலையாள மல்லிகையான கார்த்திகாவுக்கு தூத்துக்குடி படப்பிடிப்பில் இருந்தபோதேபல பட வாய்ப்புகள் வரத் தொடங்கி விட்டன.

தூத்துக்குடி ரீலீஸ் ஆன பின்னர் அவருக்கு நிறைய வாய்ப்புகள் வருகிறதாம்.இருந்தாலும் நல்ல கதையாக பார்த்து செலக்ட் செய்து புதிய படங்களை ஒப்புக்கொள்கிறார் கார்த்திகா.

தூத்துக்குடிக்கு அடுத்து கார்த்திகா நடிக்கப் போகும் படம்தான் பிறப்பு. இப்படத்தில்அவருக்கு ஜோடியாக நடிப்பவர் பிரபா என்ற புதுமுகம். கார்த்திகாவைத் தவிரஇன்னொரு நாயகியும் உண்டாம்.

இரண்டு ஹீரோயின் படமாக இருந்தாலும் கதையில் தனக்கு அதிக முக்கியத்துவம்உண்டு என்பதால்தான் இப்படத்தை ஒப்புக் கொண்டாராம் கார்த்திகா.

வெறும் கிளாமர் காட்டுவதில் தனக்கு உடன்பாடில்லை என்று கூறும் கார்த்திகா,கொஞ்சமாச்சும் நடிக்கவும் வாய்ப்பு இருக்க வேண்டும். அப்படிப்பட்டபடங்களைத்தான் நான் ஒப்புக் கொள்கிறேன் என்கிறார்.

ஈரநிலம் நாயகி நந்திதா, இப்படத்தில் ஒரு பாட்டுக்கு கெட்டாட்டம் போடவுள்ளாராம்.இவரும் ரொம்ப காலமாக ஹீரோயின் வாய்ப்பை எதிர்பார்த்து காத்திருந்தும் சரியானபடி அமையாததால், சிங்கிள் பாட்டுக்களுக்கு ஆட்டம் போட ஆரம்பித்துள்ளார்.

பாலு மகேந்திராவின் மகன் ஷங்கி மகேந்திராதான் படத்திற்கு கேமராமேன். படத்தைஇயக்கப் போவது எல்.வி.இளங்கோவன் என்ற புதுமுகம். இவர் பாலா, நாசர்,கே.விஜயன் ஆகியோரிடம் உதவியாளராக இருந்தவர்.

படத்தோட கதை என்னங்கண்ணா என்று இளங்கோவனிடம் கேட்டபோது, பிறக்கிறஒவ்வொரு பிறப்புக்கும் ஒரு அர்த்தம் உண்டு. பிறந்தவர்கள் தாங்கள் எடுத்துக்கொள்ளும் முயற்சிக்கேற்ப கடவுளாகவோ, மகாத்மா போன்ற மாமனிதராகவோஅல்லது சாதாரண மனிதராகவோ மாறுகிறார்கள். இதைத்தான் கதைக் கருவாககொண்டு படத்தை அமைத்துள்ளோம் என்றார்.

நாகர்கோவில், பாலக்காடு, பொள்ளாச்சி என குளுகுளு பிரதேசங்களில்படப்பிடிப்பைத் தொடங்கி படு வேகமாகப் போய்க் கொண்டிருக்கிறார்கள்.தீபாவளிக்கு திரைக்குக் கொண்டு வருகிறார்களாம்.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil