நயன்தாரா பிறந்தநாளை கொண்டாடிய காத்து வாக்குல ரெண்டு காதல் டீம்... சமந்தா வாழ்த்து!
சென்னை : நடிகை நயன்தாரா தனது பிறந்தநாளை இன்றைய தினம் கொண்டாடி வருகிறார்.
Recommended Video
அவரது நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள காத்து வாக்குல ரெண்டு காதல் அடுத்த மாதம் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நயன்தாராவின் பிறந்தநாளை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.

நடிகை நயன்தாரா
நடிகை நயன்தாரா தென்னிந்திய மொழிப் படங்களில் தவிர்க்க முடியாத நாயகியாக உள்ளார். முன்னணி நடிகர்கள் நயன்தாராவை நாயகியாக ஒப்பந்தம் செய்ய மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் பெரிய ஹீரோக்களுக்கு நாயகியாகவும் தனிப்பட்ட படங்களிலும் அழுத்தமான முத்திரையை பதித்து வருகிறார்.

சிறப்பான கதாபாத்திரங்கள்
இவரது நடிப்பில் அறம், நெற்றிக்கண் உள்ளிட்ட படங்கள் ஹீரோயினை மையமாக கொண்டு வெளிவந்து அவருக்கு சிறப்பான பெயரை பெற்றுத் தந்துள்ளன. அதேபோல அண்ணாத்த, பிகில் போன்ற படங்களிலும் ஹீரோவிற்கு இணையான கதாபாத்திரங்களில் நடித்து பெயர் பெற்று வருகிறார்.

தயாரிப்பு நிறுவனம் துவக்கம்
இவரது சம்பளமும் கோடிகளில் காணப்படுவதாக கூறப்படுகிறது. மேலும் தனிப்பட்ட முறையில் தயாரிப்பு நிறுவனத்தையும் துவக்கி சிறந்த படங்களையும் தயாரித்தும் விநியோகித்தும் வருகிறார். அந்த வகையில் கூழாங்கல் என்ற படம் சர்வதேச திரைப்பட விழாக்களில் தொடர்ந்து பல விருதுகளை பெற்று வருகிறது.

காத்து வாக்குல ரெண்டு காதல் படம்
இதேபோல இவரது தயாரிப்பில் உருவாகியுள்ள காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தை விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார். இந்தப் படம் அடுத்த மாதத்தில் ரிலீசாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. படத்தில் விஜய் சேதுபதியுடன் 3வது முறையாக இணைந்துள்ளார் நயன்தாரா.

பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியீடு
இந்தப் படத்தில் சமந்தாவும் நடித்துள்ளார். இரண்டு நாயகிகள் உள்ள நிலையில் படத்திற்கான எதிர்பார்ப்பு கூடியுள்ளது. படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தாவின் கேரக்டர்களை வெளிப்படுததும் வகையில் இரு தினங்களுக்கு முன்பு பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியிடப்பட்டுள்ளன.

சமந்தா வாழ்த்து
இந்நிலையில் இன்றைய தினம் நயன்தாராவின் பிறந்ததினத்தை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இந்த கொண்டாட்டத்தில் சமந்தா, விஜய் சேதுபதி மற்றும் விக்னேஷ் சிவன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். இதையடுத்து சமந்தா நயன்தாராவை கட்டியணைத்து பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











