ஜோதிகா படத்திற்கு நல்ல விமர்சனம் கிடைத்தும் இப்படி ஆகிவிட்டதே, பாவம்
Recommended Video

சென்னை: ஜோதிகா, இலியானா ஆகியோர் நடிப்பில் வெளியான படங்கள் ஆன்லைனில் கசிந்துவிட்டது.
ராதாமோகன் இயக்கத்தில் ஜோதிகா, விதார்த், லட்சுமி மஞ்சு உள்ளிட்டோர் நடித்த காற்றின் மொழி படம் வெள்ளிக்கிழமை ரிலீஸானது. படத்தை பார்த்த அனைவரும் அருமை என்று தெரிவித்துள்ளனர்.
ஜோதிகா தனது சினிமா கெரியரிலேயே இந்த படத்தில் தான் சிறப்பாக நடித்துள்ளார் என்று பலரும் பாராட்டியுள்ளனர்.

மகிழ்ச்சி
காற்றின்மொழி படத்திற்கு விமர்சகர்கள் மட்டும் அல்ல ரசிகர்களும் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர். ஜோதிகாவுக்கு இந்த படம் மூலம் மேலும் நல்ல பெயர் கிடைத்துள்ளது. இந்நிலையில் படக்குழுவினரை அதிர்ச்சி அடைய வைக்கும் சம்பவம் நடந்துள்ளது.

ஆன்லைன்
காற்றின் மொழி படம் ரிலீஸான சில மணிநேரத்திலேயே அது ஆன்லைனில் கசிந்துவிட்டது. பல்வேறு இணையதளங்களில் பல்வேறு தரத்துடன் படம் வெளியாகியுள்ளது. இதனால் படத்தின் வசூல் பாதிக்கப்படும் என்று அஞ்சப்படுகிறது. சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட காற்றின் மொழிக்கு பைரசியால் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

தியேட்டர்கள்
காற்றின் மொழி பற்றி நல்ல விமர்சனங்கள் வந்ததை பார்த்தவர்கள் வார இறுதி நாட்களில் தியேட்டருக்கு செல்ல நினைத்திருக்கலாம். தற்போது படம் ஆன்லைனில் கசிந்துள்ளதால் தியேட்டருக்கு செல்வோரின் எண்ணிக்கை வெகுவாக குறையும். வீட்டில் இருந்து கொண்டு படத்தை டவுன்லோடு செய்து பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இலியானா
தெலுங்கில் ரவி தேஜா, இலியானா நடித்த அமர் அக்பர் அந்தோணி படம் கடந்த 16ம் தேதி ரிலீஸானது. அந்த படமும் ரிலீஸான சிறிது நேரத்தில் 6 வகை தரத்துடன் ஆன்லைனில் கசிந்துள்ளது. ஆன்லைனில் வெளியான படத்தை பலரும் டவுன்லோடு செய்துள்ளனர். கஷ்டப்பட்டு பலர் உழைப்பில் உருவாகும் படங்கள் ஆன்லைனில் கசிவது வருத்தமான விஷயம்.


Click it and Unblock the Notifications











