ஏன் என்னை பார்த்து அந்த கேள்வியை கேட்கிறீர்கள்? சீறுகிறார் 'காவியத்தலைவன்' வேதிகா

By Veera Kumar

சென்னை: பிற நடிகைகளிடம் கேட்காத கேள்வியை என்னை பார்த்து மட்டும் ஏன் கேட்கிறீர்கள் என்கிறார் பரதேசி, காவியத்தலைவன் படங்களின் நாயகி வேதிகா குமார்.

வசந்தபாலன் இயக்கத்தில், ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் வெளியாக உள்ள திரைப்படம் காவியத்தலைவன். இப்படத்தில் பாலாவின் பரதேசி திரைப்பட நாயகி, வேதிகா நடிக்கிறார்.

கமர்சியல் படம்தான்

கமர்சியல் படம்தான்

படப்பிடிப்பு அனுபவம் குறித்து வேதிகா கூறியதாவது: 20வது நூற்றாண்டு நாடக கலைஞர்களின் வாழ்க்கையை சுற்றி நகரும் கதைதான் காவியத்தலைவன். இந்த படத்தை பழங்காலத்து ஆவணப்படம் என்று யாரும் நினைத்துவிட தேவையில்லை. பக்கா கமர்சியல் படம் இது. வசந்தபாலன், சித்தார்த், ஏ.ஆர்.ரகுமான் ஆகியோர் பணியாற்றும் படம் என்பதில் இருந்தே இதை மக்கள் தெரிந்துகொள்ள முடியும்.

கிளாமர் காட்டுபவர்களிடம் கேளுங்கள்

கிளாமர் காட்டுபவர்களிடம் கேளுங்கள்

தேசிய விருது பெற்ற, பரதேசி திரைப்படத்துக்கு பிறகு நான் வேறு படங்களில் நடிக்கவில்லை. எனவே, எதற்கு இடைவெளி விட்டு காவியத்தலைவனை தேர்ந்தெடுத்தீர்கள் என்று பலரும் கேட்கின்றனர். கமர்சியல் படங்களில் நடிக்க வேண்டியதுதானே என்றும் அறிவுறுத்துகிறார்கள். ஆனால் இதே கேள்வியை, மரத்துக்கு பின்னால் சுற்றி டூயட் பாடும் ஹீரோயின்களிடமும், கவர்ச்சி காட்டுபவர்களிடமும் இவர்கள் ஏன் கேட்பதில்லை என்று நினைக்கும்போது எனக்கு சிரிப்புதான் வருகிறது.

நல்ல படமா, கெட்ட படமா?

நல்ல படமா, கெட்ட படமா?

நான் கமர்சியல் அல்லது கமர்சியல் இல்லாத படம் என்று எதையும் பிரித்து பார்ப்பதில்லை. நல்லது மற்றும் மோசமான படங்கள் என்று இருவகைகள்தான் இருப்பதாக நான் நினைக்கிறேன். கதை திருப்திகரமாக இருந்தால் அதில் நடிக்க நான் தயாராக இருப்பேன்.

7 தேசிய விருது வெற்றியாளர்கள்

7 தேசிய விருது வெற்றியாளர்கள்

காவியத் தலைவன் குழுவில் தேசிய விருது பெற்ற 7 கலைஞர்கள் உள்ளனர். இப்படி ஒரு டீமுடன் வேலை பார்ப்பது நல்ல அனுபவம். ஜாம்பவான் பாடகி கே.பி.சுந்தராம்பாள் கேரக்டரில் நான் நடித்துள்ளேன். இதற்காக சரஸ்வதி சபதம் மற்றும் பல பழங்கால நாடகங்களை டிவியில் பார்த்து பயிற்சி எடுத்து வருகிறேன். இந்த திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது மிகப்பெரிய விருது. இவ்வாறு வேதிகா கூறினார்

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X