ஆத்தி.. வயநாடு ரெசார்ட்டில் ஜாலி குளியல்.. 27 வயது டிவி நடிகை வெளியிட்ட செம போட்டோஸ்!

சென்னை: பாரதி கண்ணம்மா, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்களில் நடித்து வந்த காவியா அறிவுமணி தற்போது தொடர்ந்து பல படங்களில் வாய்ப்புக் கிடைக்க மாஸ் காட்டி வருகிறார். விஜய் டிவியில் இருந்து சினிமாவுக்கு பல நடிகைகள் ஒவ்வொரு வருஷமும் அடுக்கடுக்காக சென்றுக் கொண்டிருக்கும் நிலையில், அதில் ஒருவராக காவியா அறிவுமணியும் அணிவகுத்து இருக்கிறார்.

பரத், வாணி போஜன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான மிரள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் காவியா அறிவுமணி. அடுத்து மாஸ்டர் மகேந்திரன் நடிப்பில் உருவாகி வரும் ரிப்பப்பரி படத்திலும் இவர் நடித்து வருகிறார். நயன்தாரா தயாரிப்பில் கவின் நடித்து வரும் ஊர்க்குருவி படத்திலும் இவர் தான் ஹீரோயின் என சொல்லப்பட்டது. ஆனால், அந்த படம் என்ன ஆனது என்றே தெரியவில்லை. இந்நிலையில், வயநாடு ரெசார்ட்டில் காவியா அறிவுமணி வெளியிட்ட சில ஹாலிடே பிக்ஸ் டிரெண்டாகி வருகிறது.

Kaavya Arivumani enjoys her New Year Holidays at Wayanad resort and shared some swimming pool pics

சீரியல் நடிகை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பாரதிகண்ணம்மா சீரியலில் அஞ்சலியாக நடித்து வந்தவர் காவியா அறிவுமணி. அவருக்கு ஸ்வீட்டி என்ற செல்லப் பெயரும் இருக்கிறது. ஆனால், ரசிகர்கள் இவரை அஞ்சலி என்றுதான் அழைத்து வந்தனர். பாரதி கண்ணம்மா சீரியலை தொடர்ந்து பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக நடித்து வந்த விஜே சித்ரா உயிரிழந்த நிலையில், அந்த கதாபாத்திரத்தில் இவர் நடித்து மேலும், பிரபலமானார்.

மாடலிங்கில் ஆர்வம்: இவர் சீரியலுக்கு வருவதற்கு முன்னரே கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும்போது நடிப்பின் மீது இருந்த ஆர்வத்தின் காரணமாக மாடலிங் துறையில் ஆர்வம் செலுத்தி வந்தார். அதன் காரணமாக இவர் மாடலிங் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கிறார். அதிலிருந்து தான் இவருக்கு சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

Kaavya Arivumani enjoys her New Year Holidays at Wayanad resort and shared some swimming pool pics

நயன்தாரா ரசிகை: லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் தீவிரமான ரசிகை நம்ம காவியா அறிவுமணி என்பது பலருக்கும் தெரியும். அதனால் தான் அடிக்கடி நயன்தாராவின் கெட்டப்பில் போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு அசத்துவார். இன்ஸ்டாகிராமில் யாரடி நீ மோகினி படத்தின் பாடலுக்கு ரீல்ஸ் வீடியோ எல்லாம் போட்டு நெட்டிசன்கள் கலாய்த்து தள்ளிய அனுபவங்கள் எல்லாம் நிறையவே உண்டு. ஒருவரை பிடித்தால் இப்படியா அவர் போலவே மாறிவிடுவீர்கள் என சிலர் ட்ரோல் செய்தாலும், காவியாவை பார்த்து ரசிகர்கள் மட்டுமின்றி சில சினிமா பிரபலங்களே விட்ட ஜொள்ளு தான் அவரை இமிடியேட்டாக சீரியல் நடிகையிலிருந்து சினிமா ஹீரோயினாக புரமோட் செய்துள்ளது.

வயநாடு ரெசார்ட்டில்: பிரபல நடிகைகள் முதல் சீரியல் நடிகைகள் வரை கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை கொண்டாட கிளம்பி விட்டனர். ஆண்டு இறுதியை பல ஊர்களிலும், வெளிநாடுகளிலும் பலர் கொண்டாடி வரும் நிலையில், வயநாடு ரெசார்ட்டில் காவியா அறிவுமணி நீச்சல் குளத்தில் புத்தாண்டு விடுமுறையை கொண்டாடும் புகைப்படங்களை தற்போது வெளியிட்டு இணையத்தின் சூட்டை அதிகரித்துள்ளார்.

Kaavya Arivumani enjoys her New Year Holidays at Wayanad resort and shared some swimming pool pics

நீச்சல் குளத்தில்: தர்ஷா குப்தா போல படு போல்டாக நீச்சல் குளத்தில் வெறும் உள்ளாடையுடன் எல்லாம் போஸ் கொடுக்காமல் செம க்யூட்டாக தனது ஸ்டைலில் கவர்ச்சி குளியல் போட்ட போட்டோக்களை வெளியிட்டு லைக்குகளை குவித்து வருகிறார் காவியா அறிவுமணி. கோலிவுட்டின் இளம் நடிகையாக மாறியுள்ள இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 1.4 மில்லியன் ரசிகர்கள் ஃபாலோயர்களாக உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X