நயன்தாரா படத்தில் கமீட் ஆன பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை.. கவினுக்கு கிடைத்த கலக்கல் ஜோடி!

சென்னை: நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் உருவாக உள்ள 'ஊர் குருவி' படத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து வரும் பிரபல நடிகை கமீட் ஆகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

லிப்ட் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாக உள்ள ஊர் குருவி படத்தில் கவின் ஹீரோவாக புக் ஆகி உள்ளார்.

கவினுக்கு ஜோடியாகத் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை நடிக்கப் போகிறார் என்கிற அட்டகாச தகவல் வெளியாகி உள்ளது.

ஹிட்டான லிப்ட்

ஹிட்டான லிப்ட்

டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியான கவினின் லிப்ட் திரைப்படம் ஒடிடி தளத்தில் பேய் ஹிட் அடித்து வெற்றி அடைந்துள்ளது. பிக் பாஸ் கவின் மற்றும் பிகில் அம்ரிதா நடித்த லிப்ட் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுத் தர அடுத்த படத்திற்கான வாய்ப்பும் கவினுக்கு கிடைத்தது.

நயன்தாரா படம்

நயன்தாரா படம்

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் சார்பில் அடுத்ததாக உருவாக உள்ள ஊர் குருவி படத்தில் கவின் நாயகனாக நடிக்க உள்ளதாக சமீபத்தில் லிப்டில் விக்னேஷ் சிவனை மடக்கி கவின் கதை சொல்லும் வீடியோவுடன் அறிவிப்பு வெளியானது. இந்நிலையில், தற்போது அந்த படத்தில் கவினுக்கு ஜோடி யாரு என்கிற தகவல் வெளியாகி உள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லையாக நடித்த விஜே சித்ரா தற்கொலை செய்து கொண்டு இறந்த நிலையில், புதிய முல்லையாக அந்த தொடரில் அறிமுகமான காவ்யா அறிவுமணி தான் கவினுக்கு ஊர் குருவி படத்தில் ஜோடியாக நடிக்கப் போவதாக தகவல்கள் கசிந்துள்ளன.

Recommended Video

நடுரோட்டில் Bag வாங்கிய Nayanthara வைராகும் Video | Filmibeat Tamil
பெயர் பொருத்தம்

பெயர் பொருத்தம்

அறிமுக இயக்குநர் அருண் இயக்கத்தில் உருவாக உள்ள ஊர் குருவி படத்தில் கவினுக்கு ஜோடியாக காவ்யா அறிவுமணி நடிக்கப் போகும் அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என தெரிகிறது. கவின் - காவ்யா என பெயர் பொருத்தமே நன்றாக இருக்கிறதே என படக்குழு உற்சாகம் அடைந்துள்ளார்களாம்.

லாஸ்லியாவுடன் நடிப்பாரா

லாஸ்லியாவுடன் நடிப்பாரா

பிக் பாஸ் தமிழ் சீசன் 3ல் கவின் மற்றும் லாஸ்லியா இடையே காதல் மலர்ந்த நிலையில், அது அப்படியே நிகழ்ச்சி முடிந்ததும் காணாமல் போனது. தமிழில் தொடர்ந்து லாஸ்லியாவும் கவினும் பல படங்களில் நடித்து வரும் நிலையில், இருவரும் இணைந்து நடிக்க வேண்டும் என்றும் நடிப்பார்களா? என்றும் கவிலியா ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X