»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Posted By:
Subscribe to Oneindia Tamil

தமிழில் நெடு நாட்களாய் தயாராகி வரும் படம் காதல் டாட் காம்.

இதில் ஹீரோயினாக அறிமுகமாகும் சுருதி ராஜுக்கும் சைட் ஹீரோயினாக வரும் ராதிகா செளத்ரிக்கும் கடும்கவர்ச்சிப் போட்டியாம்.

ஆந்திராவைச் சேர்ந்த சுருதி ராஜ் அங்கு ஏற்கனவே தெறமை காட்டியவர் தான். இதனால் மப்பும் மந்தாரமாகஇருந்தாலும் ராதிகாவால் அவரைத் தோற்கடிக்க முடியவில்லையாம். காட்சிக்கு காட்சி கவர்ச்சி ஆட்டம்போடுகிறாராம் சுருதி.

ஒருவர் வாழ்வில் எத்தனை காதல் வந்தாலும் முதல் காதலை மறக்கவே முடியாது என்பது தான் கதையின் கருவாம்.செல்வராஜ் இயக்கும் இந்தப் படத்தைத் தயாரிப்பது லண்டனைச் சேர்ந்த செல்வேல் என்னும் புதிய தயாரிப்பாளர்.இவர் ஒரு இலங்கைத் தமிழர்.

மாஜி மலையாள பலான நடிகை சீமாவின் மகளான அனுவும் இந்தப் படத்தில் நடிக்கிறார். படம் நீண்டகாலஇழுத்தடிப்புக்குப் பின் உருவாகியிருக்கிறது. கொழும்பு துறைமுகத்துக்குள்ளும் சூட்டிங் நடத்தியிருக்கிறார்கள்.இங்கு படப்பிடிப்பு நடத்தப்பட்ட முதல் படம் இது தானாம்.

பைவ் ஸ்டார் படத்தில் நடித்த பிரசன்னா தான் ஹீரோ.

இப்போது முன்பு பேசிய விவரத்துக்கு வருவோம். இதில் ராதிகா செளத்ரிக்கு ஒரு டான்ஸ் வைத்தார்கள். அவர்டைரக்டரை வளைத்து சில சீன்களையும் வாங்கிவிட்டார். அதில் முடிந்த அளவுக்கு கவர்ச்சியும் காட்டியுள்ளார்.

இதைப் பார்த்த சுருதி ராஜ், எனக்கும் அதிகமான கவர்ச்சியான காட்சிகள் வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தாராம்.இதனால் அவருக்கும் சில குளியல் காட்சிகளை வைத்தார்களாம். இது எப்படி இருக்கு !!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil