ரஜினிக்கு ஜோடியாக நடிக்கிறாரா காஜல்?
Recommended Video

சென்னை: கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் படத்தில் நடிக்க காஜல் அகர்வாலை யாரும் அணுகவில்லை எனக் கூறப்படுகிறது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துக் கொண்டிருக்கிறார். இன்னும் பெயரிடப்படாத திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த படத்தில் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, மேகா ஆகாஷ், சனந்த் ஆகியோர் நடிக்கின்றனர். இத்திரைப்படத்தில் காஜல் அகர்வால் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அது உண்மை இல்லை என்பது தெரிய வந்துள்ளது.
காஜல் அகர்வால் இப்போது கன்னடம் மற்றும் தெலுங்கில் பிசியாக உள்ளார். தத்தாஸ்த்து, ஏகே 97 ஆகிய கன்னட படங்களும், தெலுங்கில் ராம்சரணுடன் மெருப்பு திரைப்படமும் இந்த ஆண்டும் வெளிவர இருக்கின்றன.
இப்போது வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் மிஸ்டர் சந்திரமௌலி திரைப்பட இயக்குனர் திரு இயக்கும் படமான கருடாவில் விக்ரமுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். இப்படம் அடுத்த ஆண்டு வெளியாக உள்ளது.


Click it and Unblock the Notifications











