அது நான் தான், நானே தான்: பெருமையாக கூறும் காஜல் அகர்வால்
சென்னை: விஜய்ய அட்லீ மீண்டும் இணையும் படத்தின் மூன்றாவது நாயகியாக காஜல் அகர்வால் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
பைரவா படத்தை அடுத்து விஜய் அட்லீயின் இயக்கத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கு விஜய் 61 என தற்காலிகமாக பெயர் வைத்துள்ளனர். இந்த படத்தில் சமந்தா, ஜோதிகா ஆகியோர் நடிக்க உள்ளனர்.
பல ஆண்டுகள் கழித்து விஜய்யும், ஜோதிகாவும் மீண்டும் சேர்ந்து நடிக்கிறார்கள்.

காஜல்
அட்லீ காஜல் அகர்வாலையும் தனது படத்தில் ஒப்பந்தம் செய்துள்ளார். காஜல் முன்னதாக துப்பாக்கி, ஜில்லா ஆகிய படங்களில் விஜய்யுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.

விஜய்
மீண்டும் விஜய்யுடன் ஜோடி சேர்ந்து நடிப்பதை ஆந்திராவில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது காஜல் ஒப்புக் கொண்டுள்ளார். படத்தில் மூன்று ஹீரோயின்கள் இருப்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தல 57
காஜல் தற்போது அஜீத் ஜோடியாக தல 57 படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையே அவர் சிரஞ்சீவி ஜோடியாக நடித்த கைதி எண் 150 படம் பாக்ஸ் ஆபீஸில் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது.

2017
தல படம், மீண்டும் தளபதியுடன் ஒரு படம், இந்த ஆண்டு ரிலீஸான முதல் படமே சூப்பர் டூப்பர் ஹிட் என்பதால் காஜல் அகர்வால் மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











