ராமேஸ்வரத்தை ரொம்ப மிஸ் பண்றேன்.. கடலில் கால் நனைத்து உருகும் கீர்த்தி சுரேஷ்.. வேற லெவல் வைரல்!

சென்னை: இயக்குநர் செல்வராகவன் நடிகர் அவதாரம் எடுத்துள்ள சாணிக் காயிதம் படத்தில் கீர்த்தி சுரேஷும் நடித்து வருகிறார்.

Recommended Video

நடிகை Keerthy Suresh | விழிப்புணர்வு, தடுப்பூசி கண்டிப்பாக போட வேண்டும் | Vaccine

அந்த படத்தின் படப்பிடிப்புக்காக ராமேஸ்வரத்தில் முகாமிட்டுள்ள கீர்த்தி சுரேஷ் ராமேஸ்வரத்தை சுற்றிப் பார்த்தபோது எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

காஜல் அகர்வால் உள்ளிட்ட முன்னணி நடிகைகள் கீர்த்தி சுரேஷின் புகைப்படங்களை லைக் செய்துள்ளனர்.

செல்வராகவனுடன்

செல்வராகவனுடன்

இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் சாணிக் காயிதம் படத்தில் செல்வராகவன் உடன் இணைந்து நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். ராமேஸ்வரத்தில் அந்த படத்தின் ஒரு பகுதி படப்பிடிப்பு நடைபெற்று அது நிறைவு பெற்றுள்ளது. ராமேஸ்வரத்தை ரொம்பவே மிஸ் செய்கிறேன் என கீர்த்தி சுரேஷ் தற்போது போட்டோக்களை ஷேர் செய்துள்ளார்.

ரம்மியமான ராமேஸ்வரம்

ரம்மியமான ராமேஸ்வரம்

ரம்மியமான ராமேஸ்வரத்தில் ஷூட்டிங் செய்தால் அந்த இடத்தை சுற்றிப் பார்க்காமல் இருக்க முடியுமா என்ன? வாழ் படம் போல படப்பிடிப்பு இல்லாத நேரத்தில் சுற்றிப் பார்க்க கிளம்பி உள்ள கீர்த்தி சுரேஷ் ராமேஸ்வரம் கடலில் எடுத்துக் கொண்ட அழகான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்துள்ளார்.

கடலில் கால் நனைத்து

கடலில் கால் நனைத்து

ராமேஸ்வரம் கடலில் அழகாக கால் நனைத்தபடி இருக்கும் புகைப்படத்தை பார்த்த கீர்த்தி சுரேஷின் ரசிகர்கள் அவரது அழகில் சொக்கிப் போய் லைக்குகளை குவித்து வருகின்றனர். அந்திமாலை நேரத்தில், படகில் செல்லும் புகைப்படங்களையும் கீர்த்தி சுரேஷ் பதிவிட்டுள்ளார்.

காஜல் அகர்வால், மாளவிகா மோகனன்

காஜல் அகர்வால், மாளவிகா மோகனன்

போட்டி நடிகையாக பார்க்காமல் கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட புகைப்படங்களை பார்த்த நடிகை காஜல் அகர்வால் மற்றும் மாளவிகா மோகனன் ஹார்ட்டீன் விட்டு லைக்குகளை குவித்துள்ளனர். மேலும், ஏகப்பட்ட பிரபலங்களும், ரசிகர்களும் கீர்த்தி சுரேஷின் அழகை வர்ணித்து வருகின்றனர்.

அண்ணாத்த வருது

அண்ணாத்த வருது

இந்த ஆண்டு தீபாவளிக்கு ரஜினிகாந்த் உடன் கீர்த்தி சுரேஷ் இணைந்து நடித்துள்ள அண்ணாத்த திரைப்படம் வெளியாகிறது. மகேஷ் பாபு நடிப்பில் உருவாகி வரும் சர்காரு வாரி பட்டா படத்திலும் கீர்த்தி சுரேஷ் தான் நாயகி என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X