டியர் காஜ்! நட்சத்திரம் போல் ஜொலித்து.. நடிப்பு உலகையே ஆளவேண்டும்! #HBDKajalAggarwal

சென்னை: நடிகை காஜல் அகர்வாலின் பிறந்தநாள் டிவிட்டரில் ட்ரென்ட்டாகியுள்ளது. காஜல் அகர்வாலுக்கு ரசிகர்கள் டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

நடிகை காஜல் அகர்வால் கியூன்! ஹோ கயா நா.. என்ற திரைப்படம் மூலம் 2004 ஆம் ஆண்டு இந்தியில் முதன் முதலில் அறிமுகமானார். தெலுங்கில் லக்ஷமிக்கு கல்யாணம் படத்திலும் தமிழில் பரத்துடன் பழனி படத்திலும் அறிமுகமானார்.

காஜல் அகர்வால் 1985ஆம் ஆண்டு ஜூன் 19ஆம் தேதி மும்பையில் பிறந்தார். இவரது பெற்றோர் சுமன் அகர்வால், வினய் அகர்வால் ஆவர். தன்னுடைய கல்வியை மும்பையிலேயே முடித்த பிறகு, விளம்பரங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

ஹிட்டடித்த மஹதீரா

ஹிட்டடித்த மஹதீரா

2004ஆம் ஆண்டு முதல் 2008ஆம் ஆண்டு வரை இவர் நடித்த படங்கள் பெரியளவில் வெற்றி பெறவில்லை. ஆனால் 2009ஆம் ஆண்டு எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான மஹதீரா படத்தில் இளவரசியாக நடித்த இவரது கதாபாத்திரம் பெரும் ஹிட்டடித்தது.

தமிழில் முன்னணி

தமிழில் முன்னணி

இதைத்தொடர்ந்து காஜல் அகர்வாலின் காட்டில் மழைதான். தமிழில் சூர்யா, விஜய் என முன்னணி நடிகர்களுடன் கலக்கி வருகிறார். தமிழில் முன்னணி நடிககையாகவும் திகழ்கிறார் காஜல் அகர்வால்.

ட்ரென்ட்டான பிறந்த நாள்

ட்ரென்ட்டான பிறந்த நாள்

காஜல் அகர்வாலுக்கு இன்று பிறந்த நாள். இதனை முன்னிட்டு டிவிட்டரில் காஜல் அகர்வாலுக்கு ரசிகர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதனால் டிவிட்டரில் காஜல் அகர்வாலின் பிறந்தநாள் ட்ரென்ட்டாகியுள்ளது.

தளபதியுடன் 3 படங்கள்

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் காஜல் அகர்வால்.. தளபதியுடன் மூன்று பிளாக்பஸ்டர் படங்களில் நடித்துள்ளீர்கள்.

மகேஷ் பாபு ரசிகர்கள்

பிறந்தநாள் வாழ்த்துகள் காஜல் அகர்வால்.. அழகி.. மகேஷ் பாபு ரசிகர்கள் சார்பாக வாழ்த்துகள்..

டோலிவுட் ராணி காஜல் அகர்வால்

டோலிவுட் ராணிக்கு பவர்ஸ்டார் பவன் கல்யாண் ரசிகர்கள் சார்பாக பிறந்தநாள் வாழ்த்துக்கள்

நடிப்பு உலகை ஆள வேண்டும்

நட்சத்திரம் போல் ஜொலித்து நடிப்பு உலகத்தையே ஆள வேண்டும்.. உங்கள் பிறந்தநாளில் மிகவும் சந்தோஷமாகவும், பிளாஸ்டராகவும் இருங்கள் பிறந்தநாள் வாழ்த்துக்கள் டியர் காஜ்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X