பாலிவுட் போகும் காஜல் அகர்வால்!

ஆனால் அந்தப் படம் தாமதமானதால், வேறு சில படங்களிலும் நடித்தார். லட்சுமி கல்யாணம், பொருடு, ஆடாடிஸ்டா என அவரது அத்தனை ஆரம்ப காலப் படங்களும் தோல்வியைத் தழுவின.
அதன் பிறகு பழனி, நான் மகான் அல்ல போன்ற படங்களில் நடித்துள்ளார். தெலுங்கில் முன்னணி நடிகையாகத் திகழ்கிறார். சிரஞ்சீவியின் மகன் ராம்சரண் தேஜா நடித்த மகாதீராவின் நாயகி இவர்தான்.
இப்போது பாலிவுட்டில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது காஜலுக்கு. அஜய் தேவ்கன் நாயகனாக நடிக்கிறார். ரோஹித் ஷெட்டி இயக்குகிறார்.
காஜல் அகர்வால் முழு நீள நாயகி வேடத்தில் இந்தியில் நடிப்பது இதுதான் முதல் முறை என்றாலும், இதற்கு முன்பும் அவர் ஒரு இந்திப் படத்தில் நடித்துள்ளார். 'க்யூன்... ஹோ கயா ந' படத்தில் ஐஸ்வர்யா ராயின் தோழி வேடத்தில் நடித்திருப்பார் அவர். 2004-ல் வெளியான படம் இது!
Comments


Click it and Unblock the Notifications