அட நீங்க வேற.. நான் யாரையும் லவ் பண்ணவே இல்ல.. ! - காஜல்
நான் மும்பு தொழிலதிபரை காதலிப்பதாக வந்த செய்திகள் அனைத்தும் வதந்திகளே, என்று மறுப்பு வெளியிட்டுள்ளார் காஜல் அகர்வால்.
காஜல் அகர்வாலும், மும்பை தொழிலதிபர் ஒருவரும் ஜோடியாக துபாயில் சுற்றியதாக செய்திகளும் படங்களும் சமீபத்தில் வெளியானது நினைவிருக்கலாம்.

திருமணம்
இந்த தொழிலதிபரைத்தான் காஜல் அகர்வால் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்றெல்லாம் கூறப்பட்டது. அந்தப் படங்கள் வெளியானது காஜலை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இதெல்லாம் சகஜம்..
இந்தப் படங்கள் குறித்து காஜல் அகர்வாலின் தங்கை நிஷா கூறும்போது, ‘‘காஜலுக்கு நிறைய நண்பர்கள் உள்ளனர். நிறைய பேருடன் இணைந்து அவர் போட்டோ எடுத்துள்ளார். அதுபோல்தான் இன்டர்நெட்டில் வந்த படத்தில் இருப்பவருடனும் சேர்ந்து போஸ் கொடுத்து இருப்பார். இதை பெரிதாக்குகிறார்கள்,'' என்றார்.

காஜல் மறுப்பு அறிக்கை
தற்போது காஜல் அகர்வாலும் இதற்கு மறுப்பு தெரிவித்து உள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில், ":நான் யாரையும் காதலிக்கவில்லை. என் திருமணத்துக்கு இன்னும் நிறைய காலம் இருக்கிறது. உடனடியாக திருமணம் செய்து கொள்ளமாட்டேன்.

பிஸியோ பிஸி
நிறைய படங்களில் தற்போது பிஸியாக நடித்துக் கொண்டு இருக்கிறேன். என் உழைப்பு எனக்கு சந்தோஷத்தை கொடுக்கிறது. என் திருமணம் இரண்டு அல்லது மூன்று வருடங்கள் கழித்தே நடக்கும் இப்போது இல்லை," என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











