கல்யாணமான பிறகு இளசுகளை சுண்டியிழுக்கும் போட்டோ..மீண்டும் ஃபாமுக்கு வரும் காஜல் அகர்வால்!

சென்னை : நடிகை காஜல் அகர்வால் இளைஞர்களை சுண்டி இழுக்கும் வகையில் ஜோராக போஸ் கொடுத்துள்ள சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

சங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2ல் நடித்து வரும் இவருக்கு கடந்த அக்டோபர் மாதம் கௌதம் என்பவருடன் திருமணம் நடைபெற்றது.

கடந்த சில மாதங்களாகவே கணவருடன் இணைந்து எடுத்துக்கொண்ட ரொமான்டிக் புகைப்படங்களை பதிவிட்டு வந்த காஜல்அகர்வால் இப்போது பழைய ஃபார்முக்கு மாறி இளைஞர்களை சுண்டி இழுக்கும் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

ஊர்களின் பெயரில்

ஊர்களின் பெயரில்

தமிழ்நாட்டில் உள்ள ஊர்களின் பெயரில் பட டைட்டில்களை வைப்பதில் ஃபேமஸ் இயக்குனரான பேரரசு இயக்கத்தில் பரத் நடித்த பழனி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட நடிகை காஜல் அகர்வால் ஏற்கனவே தெலுங்கு மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து அறிமுகம் செய்யப்பட்டவர்.

தவிர்க்கமுடியாத முன்னணி நடிகையாக

தவிர்க்கமுடியாத முன்னணி நடிகையாக

வசீகரிக்கும் முட்டை கண்கள், க்யூட்டான நடிப்பு வளைந்து நெளிந்து ஆடும் நடனம் என அனைத்து வகையிலும் ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்து வந்த இவருக்கு முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு அடுத்தடுத்து கிடைக்க இப்பொழுது தென்னிந்தியாவில் தவிர்க்கமுடியாத முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இரண்டு வேடங்களில்

இரண்டு வேடங்களில்

எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக வெளியான மகதீரா திரைப் படத்தில் இரண்டு வேடங்களில் நடித்து பட்டையை கிளப்பிய காஜல் அகர்வாலுக்கு பல மொழிகளில் இருந்தும் வாய்ப்புகள் குவிய தமிழில் நான் மகான் அல்ல,துப்பாக்கி, மாற்றான், ஜில்லா, மாரி உள்ளிட்ட திரைப்படங்கள் இவரை உச்ச நட்சத்திரமாக உயர்த்தியது.

கெளதம் என்பவரை திருமணம்

கெளதம் என்பவரை திருமணம்

விஜய்,அஜித், சூர்யா, தனுஷ் என முன்னணி நடிகரின் திரைப்படங்களில் நடித்து தொடர் வெற்றிகளைக் குவித்து வந்த இவருக்கு பாலிவுட்டிலும் அடுத்தடுத்த படங்கள் அமைய அங்கேயும் தனது கொடியை பறக்க விட்டு வரும் இவர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கெளதம் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

மாலத்தீவில் என்ஜாய்

மாலத்தீவில் என்ஜாய்

திருமணத்திற்கு பிறகு கணவர் கௌதம் உடன் எடுத்துக்கொண்ட ரொமான்டிக் புகைப்படங்களை தொடர்ந்து பதிவிட்டு மாலத்தீவில் என்ஜாய் செய்த பிகினி புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களை ஏங்க வைத்து வந்த இவர் இப்பொழுது மீண்டும் பழைய ஃபார்முக்கு மாறியுள்ளார்.

பழைய ஃபார்முக்கு

பழைய ஃபார்முக்கு

புள்ளி மான் போல வெள்ளை ட்ரான்ஸ்பரண்ட் சட்டையில் உடலை வளைத்து நெளித்து படு கவர்ச்சியாக போஸ் கொடுத்துக்கொண்டு மயக்கும் பார்வையால் பார்க்கும் அனைவரையும் மயங்க வைக்கும் இந்த சுண்டியிழுக்கும் புகைப்படத்தை பார்த்த இளசுகள் செம குஷியில் இருக்க காஜல் அகர்வால் மீண்டும் பழைய ஃபார்முக்கு வந்து போட்டோக்களை வெளியிட தொடங்கியுள்ளதை பார்த்த ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X