பிடித்ததை செய்யுங்கள்… மன அழுத்தம் குறையும்.. காஜல் அகர்வால் யோசனை !
சென்னை : முன்னணி நடிகையான காஜல் தனது இன்ஸ்டா கிராம் பக்கத்தில் மன அழுத்தத்தில் இருந்து விடுபட அருமையான யோசனை கூறியுள்ளார்.
படப்பிடிப்பில் பிஸியாக இருந்த நடிகர் ,நடிகைகள் ஊரடங்கால் வீட்டில் இருந்து வருகின்றனர்.
இதனால் பலர் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். இதற்கு காஜல் அகர்வால் யோசனை ஒன்றை கூறியுள்ளார்.'

அம்சமான நடிகை
பாரதி ராஜாவின் இயக்கத்தில் உருவாக பொம்மலாட்டம் திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமான காஜல் அகர்வால், அம்சமான நடிகை என பெயர் எடுத்த இவர், அஜித், விஜய், சூர்யா என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார்.

மாபெரும் வெற்றி
தமிழ் , தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வந்த இவருக்கு தெலுங்கில் வெளியான மஹதீரா திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அதைத்தொடர்ந்து அப்படம் மொழி மாற்றம் செய்யப்பட்டு மாவீரன் என்ற பெயரில் வெளியானது தமிழிலும் இப்படம் வெற்றி பெற்றதால் தமிழில் இவருக்கு பட வாய்ப்பு குவியத் தொடங்கியது..

இந்தியன் 2
அண்மையில் இவர், கௌதம் என்பரை திருமணம் செய்து கொண்டார். இவர் சங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2வில் கமலஹாசனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். மேலும், துல்கர் சல்மானின் ஹே சினாமிக்காவிலும் நடித்து வருகிறார். இவர் கடைசியாக லைவ் டெலிகாஸ்ட் என்ற வெப் தொடரிலுல் நடித்துள்ளார்.

ஊரடங்கு
தற்போது கொரோனாவின் 2வது அலை இந்தியாவையை குலுக்கி வருகிறது. இதனால் தொற்று மேலும் பரவாமல் இருக்க இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு மற்றும் திரையரங்குகள் மூடல் என புது கட்டுப்பாடுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இதனால் படங்களில் பிசியாக நடித்த நடிகர் நடிகைகள் வீட்டில் தற்போது ஓய்வெடுத்து வருகின்றனர். வீட்டில் இருப்பது மிகவும் சிரமமாக இருப்பதாக அவர்கள் பதிவிட்டுள்ளனர்.

மன அழுத்தம் குறையும்
இந்நிலையில், நடிகை காஜல் அகர்வால், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், உல்லன் நூல் மற்றும் ஊசியை பதிவிட்டுள்ளார். அதில், நிலைமை மிகவும் கடுமையானதாக இருக்கிறது. இந்த நேரத்தில் நம்மைச் சுற்றி நடக்கிற நிகழ்வு நம்மை பதற்றம் அடைய செய்கிறது. இந்த நேரத்தில் நம் கவனத்தை வேறு திசையில் மாற்றி பிடித்ததை செய்யுங்கள் என்று கூறியுள்ளார். மேலும், நான் பின்னலை கையில் எடுத்துள்ளேன், அது எனக்கு ஓய்வெடுக்க உதவுகிறது. அதாவது மன அழுத்தத்தை குறைக்கிறது என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











