திருமணத்துக்கு பிறகு சினிமாவுக்கு குட்பை சொல்ல வேண்டியதில்லை... காஜல் அகர்வால் உறுதி

மும்பை : நடிகை காஜல் அகர்வால் முன்னணி ஹீரோக்களுடன் நடித்து முன்னணி நடிகையாக உள்ளார்.

அவர் கடந்த 2020ல் மும்பையை சேர்ந்த தொழிலதிபரை திருமணம் செய்துக் கொண்டார்.

தற்போது அவர் கர்ப்பமாக இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்த அறிவிப்பை அவர் மேற்கொள்ளவில்லை.

நடிகை காஜல் அகர்வால்

நடிகை காஜல் அகர்வால்

நடிகை காஜல் அகர்வால் தமிழில் பழனி என்ற படத்தில் பரத்திற்கு ஜோடியாக அறிமுகமானவர். தொடர்ந்து விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். தொடர்ந்து நடித்து வருகிறார்.

2020ல் திருமணம்

2020ல் திருமணம்

கடந்த 2020ல் மும்பையை சேர்ந்த தொழிலதிபர் கவுதம் கிச்லு என்பவரை அவர் திருமணம் செய்துக் கொண்டார். தற்போது அவர் கர்ப்பமாக இருப்பதாக கூறப்படுகிறது. ஆயினும் இதுகுறித்து எந்த அறிவிப்பையும் அவர் மேற்கொள்ளவில்லை. அவர் தொடர்ந்து நடித்து வருகிறார்.

சினிமாவிற்கு குட்பை சொல்ல வேண்டியதில்லை

சினிமாவிற்கு குட்பை சொல்ல வேண்டியதில்லை

சமீபத்தில் வெங்கட் பிரபு இயக்கிய லைவ் டெலிகாஸ்ட் என்ற வெப் தொடரில் அவர் நடித்துள்ளார். இந்நிலையில் அவர் அளித்துள்ள சமீபத்திய பேட்டியில் திருமணம் ஆனவுடன் சினிமாவிற்கு நடிகைகள் குட்பை சொல்லும் காலம் தற்போது மலையேறிவிட்டதாக தெரிவித்துள்ளார்.

 சினிமாவை தொடரலாம்

சினிமாவை தொடரலாம்

நடிகைகளின் திருமணம் உள்ளிட்ட சொந்த முடிவுகள் அவர்களது சினிமா வாழ்க்கையில் பிரதிபலிப்பதில்லை என்பதை ரசிகர்கள் புரிந்துக் கொள்ளும் அளவிற்கு அவர்கள் பக்குவப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தங்களது வாழ்க்கையில் எந்த மாற்றம் ஏற்பட்டாலும் தொடர்ந்து சினிமாவை தொடரலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

கேரியரில் மாற்றம் இல்லை

கேரியரில் மாற்றம் இல்லை

அதனால் தன்னுடைய திருமணத்தால் தன்னுடைய சினிமா கேரியரில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். திருமணத்திற்கு முன்பு போலவே தற்போதும் தன்னுடைய கதைகளை தான் கவனத்துடன் தேர்வு செய்து நடித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X