மெகந்தி முதல் நகைகள் வரை...மணப்பெண் அலங்கார கண்காட்சி - அழகான காஜல் அகர்வால்

சென்னை: திருமணத்தில் மணப்பெண்ணிற்குத் தேவையான மெகந்தி, நகைகள், அழங்கார பொருட்கள் ஆடைகள் என அத்தனையும் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் bridal story அமைப்பினர் மிகப்பெரிய கண்காட்சியை சென்னையில் நுங்கம்பாக்கத்தில் உள்ள தாஜ் ஹோட்டலில் நடத்தினர். நடிகை காஜல் அகர்வால் இந்த கண்காட்சியை தொடக்கி வைத்து பார்வையிட்டார்.

இப்போதெல்லாம் 90 சதவிகிதம் மணப்பெண்கள் திருமணம் என வந்துவிட்டால் பணத்தைப் பற்றி யோசிப்பதே இல்லை. தங்களை எடுப்பாய் காட்ட நிறையவே மெனக்கெடுகிறார்கள். முகத்திற்கு மேக்அப் போடுவதில் தொடங்கி தலை அலங்காரம், உடை அலங்காரம், கை கால்களில் மெகந்தி போடுவது வரை நிறைய பணத்தை செலவு செய்கின்றனர். வாழ்க்கையில் திருமணம் ஒருமுறைதான் ஆடம்பரமாக செய்ய முடியும் அதற்காக லட்சக்கணக்கில் செலவு செய்யவும் தயாராக இருக்கின்றனர்.

Kajal agarwal open bridal beaty exhibition in Chennai Taj Hotel.

மணப்பெண்கள், திருமணத்திற்குத் தேவையான அத்தனை பொருட்களையும் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் சென்னையில் நுங்கம்பாக்கத்தில் உள்ள தாஜ் ஹோட்டலில் bridal story அமைப்பினர் மிகப்பெரிய கண்காட்சியை தொடங்கியுள்ளனர். இந்த கண்காட்சியில் மணப்பெண்ணிற்குத் தேவையான பொருட்களை விற்பனை செய்பவர்கள் தங்களின் பொருட்களை காட்சிப்படுத்தியுள்ளனர்.

மெகந்தி தொடங்கி மேக்அப் சாதனங்கள், தலை அலங்கார பொருட்கள், ஆடை அலங்கார பொருட்கள், மணப்பெண் புடவைகள், ரிசப்சன் ஆடைகள் என பல ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த கண்காட்சியை அழகான காஜல் அகர்வால் தொடங்கி வைப்பது பொருத்தமானது என்று கூறியுள்ளனர் bridal story அமைப்பினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X