காஜல் அகர்வாலா இது?: மேக்கப் இல்லா போட்டோவை பார்த்து அதிர்ந்த ரசிகர்கள்
Recommended Video
சென்னை: காஜல் அகர்வால் வெளியிட்ட மேக்கப் இல்லாத புகைப்படங்களுக்கு ஏகப்பட்ட லைக்ஸ் கிடைத்துள்ளது.
தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வரும் காஜல் அகர்வால் எவ்வளவு அழகு என்பது ரசிகர்களுக்கு தெரியும். நடிகைகள் என்றால் மேக்கப் இல்லாமல் இருக்க மாட்டார்கள் என்ற எண்ணம் உள்ளது.
இந்நிலையில் காஜல் அகர்வால் தான் மேக்கப் போடாமல் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
காஜல் அகர்வால்
காஜல் அகர்வால் இன்ஸ்டாகிராமில் இரண்டு புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். மேக்கப் இல்லாத அவர் முகத்தில் புள்ளி, புள்ளியாக உள்ளது. அந்த புள்ளிகளை யாரும் கிண்டல் செய்யவில்லை. மாறாக புள்ளிகள் உங்களுக்கு அழகாக உள்ளது. இப்படிப்பட்ட புகைப்படங்களை வெளியிட தனி தைரியம் வேண்டும் என்று அவரை பாராட்டியுள்ளார்கள்.
தத்துவம்
அழகான உடல் கிடைக்கும் என்று வாக்குறுதி அளிக்கும் அழகு சாதன பொருட்களுக்காக கோடிக் கணக்கில் செலவு செய்யப்படுகிறது. நாம் எப்படி உள்ளோமோ அப்படியே ஏற்றுக் கொள்வது நமக்கு சந்தோஷத்தை தரும். மேக்கப்பால் உடல் மட்டுமே அழகாகும், உள்ளம் அல்ல என்று தத்துவம் பேசியுள்ளார் காஜல் அகர்வால்.

நடிப்பு
காஜல் அகர்வாலின் புகைப்படங்களை பார்த்து பாராட்டினாலும் நீங்கள் சும்மா ஒரு போட்டோவை வெளியிட்டுவிட்டு தத்துவம் பேச வேண்டாம். அடுத்த புகைப்படத்தில் ஓவராக மேக்கப் போட்டுத் தான் இருப்பீர்கள். ஏதோ உங்களுக்கு மூடு சரியில்லை என்று மேக்கப் போடாமல் புகைப்படம் எடுத்துவிட்டு ஏதோ பெரிய இவர் மாதிரி பேச வேண்டாம் என்று நெட்டிசன்கள் விளாசியுள்ளனர்.

சாய் பல்லவி
நீங்கள் ஏதோ ஒரு நாள் தான் மேக்கப் போடாமல் புகைப்படம் எடுக்கிறீர்கள். ஆனால் சாய் பல்லவியோ மேக்கப் போடாமல் தான் எப்பொழுதுமே உள்ளார். படங்களில் கூட மேக்கப் இல்லாமல் நடிக்கிறார். அவரிடம் இருந்து உண்மையாக இருப்பது எப்படி என்று கற்றுக் கொள்ளுங்கள். நடிகைகளால் மேக்கப் போடாமல் இருக்க முடியாது என்ற எண்ணத்தை சாய் பல்லவி எப்பொழுதோ மாற்றிவிட்டார் என்று நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர். நெட்டிசன்கள் விளாசினாலும் திரையுலக பிரபலங்களோ காஜல் நீங்கள் மிகவும் அழகாக உள்ளீர்கள். உங்களின் முகத்தில் உள்ள புள்ளிகள் அழகுக்கு அழகு சேர்த்துள்ளன என்று பாராட்டித் தள்ளியுள்ளனர். உங்களின் கண்ணில் இருக்கும் ஒளியே தனி அழகு என்கிறார்கள்.


Click it and Unblock the Notifications