கையில் சீட்டு கட்டு… பக்கத்தில் சரக்கு பாட்டில்… காஜலை விளாசும் நெட்டிசன்ஸ் !

சென்னை : நடிகை காஜல் அகர்வால் தீபாவளி தினத்தை முன்னிட்டு விஸ்கி பிராண்ட் ஒன்றிற்கு கணவருடன் சேர்ந்து விளம்பரம் செய்த புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.

சரக்கும் கையுமாக இருக்கும் இந்த புகைப்படம் தற்போது சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது.

ஒரு முன்னணி நடிகை இப்படியா நடந்துகொள்வது என ரசிகர்கள் பலர் காஜலை திட்டி தீர்த்து கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

அறிமுகம்

அறிமுகம்

காஜல் அகர்வால் 2008ம் ஆண்டு பரத்துடன் பழனி திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். இதையடுத்து பொம்மலாட்டம், நான் மகான் அல்ல, மாற்றான் ', துப்பாக்கி,ஆல் ஆன் ஆல் அழகுராஜா, ஜில்லா, மாரி, பாயும்புலி, விவேகம் , மெர்சல் என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார்.

இந்தியன் 2

இந்தியன் 2

காஜல் அகர்வால் நடித்து கடைசியாக கோமாளி படம் 2019-ல் திரைக்கு வந்தது. அவரது பாரிஸ் பாரிஸ் படப்பிடிப்பு முடிந்து திரைக்கு வராமல் முடங்கி உள்ளது ஹேய் சினாமிகா என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். கமல்ஹாசன் ஜோடியாக நடிக்கும் இந்தியன் 2 படம் பாதியில் நிற்கிறது. சிரஞ்சீவியின் ஆச்சார்யா படத்தில் நடித்து வருகிறார்.

திருமணம் செய்து கொண்டார்

திருமணம் செய்து கொண்டார்

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என அனைத்து மொழிகளில் படு பிஸியாக நடித்து வருகிறார். இவர் தொழில் அதிபர் கவுதம் கிச்சலுவை திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் மிக கோலாகலமாக நடைபெற்றதுழ. இவர் திருமணத்திற்கு பின்பும் திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

சரக்கு பாட்டிலுடன்

சரக்கு பாட்டிலுடன்

இந்நிலையில், தீபாவளி தினத்தை முன்னிட்டு விஸ்கி பிராண்ட் ஒன்றிற்கு கணவருடன் சேர்ந்து விளம்பரம் செய்த புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். அதில், பண்டிகை காலத்தை அன்பானவருடனும், கூடவே டீச்சர்ஸ் 50-யுடன் கொண்டாடுங்கள் என்பது போல்... விஸ்கி பாட்டில் பக்கத்தில் அமர்ந்தபடி... கையில் சீட்டுகட்டை வைத்துக்கொண்டு போஸ் கொடுத்துள்ளார் இந்த புகைப்படம் தற்போது சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது. ஒரு முன்னணி நடிகை இப்படியா நடந்துகொள்ளலாமா என்றும்.. சரக்குக்கும் பண்டிக்கைக்கும் என்ன சம்மந்தம் என்றும் ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X