அர்ஜென்ட்டா வந்துடுச்சு.. பாத்ரூம் இல்லை.. கடைசியா எங்கே போனேன் தெரியுமா.. காஜல் அகர்வால் ஷாக்!

சென்னை: திருமணத்துக்குப் பிறகு மீண்டும் காஜல் அகர்வால் பிசியான நடிகையாக மாறியுள்ளார். இந்தியன் 2 படத்தில் 5 ஆண்டுகளுக்கு முன்னதாக நடிக்க ஆரம்பித்த காஜல் அகர்வால் ஒரு கட்டத்திற்கு மேல் அந்த படம் வெளியாகாது என நினைத்து சினிமாவில் இருந்து தற்காலிகமாக விலகும் முடிவுக்கு வந்தார்.

கொரோனா காலத்தில் திருமணம் செய்து கொண்டு குழந்தையும் பெற்றுக் கொண்டார். மீண்டும் இந்தியன் 2 திரைப்படம் தொடங்கிய நிலையில் உற்சாகத்துடன் பல படங்களில் தற்போது நடித்து வருகிறார்.

Kajal Agarwal reveals she urinated at grave once at Jordan shooting shocks fans

உத்தம வில்லன் படத்தை இயக்கிய ரமேஷ் அரவிந்த் அதேவேகத்தில் காஜல் அகர்வாலை வைத்து இயக்கிய பாரிஸ் பாரிஸ் திரைப்படம் மதகஜராஜா, பார்ட்டி படங்களைப்போல வெளியாகாமல் அப்படியே கிடப்பில் கிடக்கிறது. இந்த மாத இறுதியில் காஜல் அகர்வால் நடித்துள்ள சத்யபாமா திரைப்படம் வெளியாகிறது. அதனை முன்னிட்டு யூடியூப் சேனலுக்கு பிரத்யேகமாக காஜல் அகர்வால் அளித்த பேட்டியில் ஏகப்பட்ட சுவாரஸ்ய விஷயங்களையும் தனக்கு படப்பிடிப்பு தளத்தில் நேர்ந்த சில சங்கடங்களையும் வெளிப்படையாக கூறியுள்ளார்.

பாலகிருஷ்ணா படம்: 2022 ஆம் ஆண்டு நடன இயக்குநர் பிருந்தா மாஸ்டர் இயக்கிய ஹே சினாமிகா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் காஜல் அகர்வால் நடித்திருந்தார். அந்தப் படமும் அவருக்கு வெற்றி கொடுக்காத நிலையில், கடந்த ஆண்டு காஜல் அகர்வால் நடிப்பில் கோஸ்டி, கருங்காப்பியம் மற்றும் பாலகிருஷ்ணா நடித்த பகவத் கேசரி உள்ளிட்ட படங்கள் வெளியானது. பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்திருந்தார். பாலகிருஷ்ணாவின் வளர்ப்பு மகளாக ஸ்ரீலீலா அந்த படத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது.

Kajal Agarwal reveals she urinated at grave once at Jordan shooting shocks fans

இந்தியன் 2: ஜூன் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட இந்தியன் தூள் திரைப்படம் ஜூலை 12-ஆம் தேதிக்கு ரிலீஸ் தள்ளிப் போய் உள்ளது. இந்தப் படத்தில் சுகன்யாவுக்கு பதிலாக பீரியட் போர்ஷனில் காஜல் அகர்வால் நடித்து இருப்பதாகவும் கலரி பயிற்சியை இந்தப் படத்துக்காக தான் கற்றுக் கொண்டதாகவும் கூறியுள்ளார். நேற்று வெளியான பாரா பாடலில் வரும் பெண் குரலில் காஜல் அகர்வால் போர்ஷன் தான் இடம்பெறும் என்றும் கூறுகின்றனர்.

சத்யபாமா: மே 17-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட காஜல் அகர்வால் நடித்துள்ள சத்யபாமா திரைப்படம் வரும் மே 31-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த படத்திற்கான புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட காஜல் அகர்வால் மிகப்பெரிய வெற்றிப் படமாக சத்யபாமா இருக்கும் என தெரிவித்துள்ளார். தெலுங்கில் உருவாகியுள்ள அந்த படத்தின் புரமோஷனுக்காக யூடியூப் சேனல்களில் பேட்டி அளித்து வருகிறார்.

Kajal Agarwal reveals she urinated at grave once at Jordan shooting shocks fans

சுடுகாட்டில் போனேன்: ஜோர்டன் நாட்டில் ஒரு படத்தின் படப்பிடிப்புக்காக சென்றிருந்தபோது உலகத்தின் முக்கிய அதிசயங்களில் ஒன்றான பெட்ராவில் பாடல் காட்சி படமாக்கப்பட்டுக் கொண்டிருந்தது. அந்த இடத்தில் எந்தவொரு பாத்ரூமும் இல்லை. ரொம்ப தொலைவில் தான் இருந்தது. அவசரமாக சிறுநீர் கழிக்க வேண்டிய நிலை வந்ததால், அங்கே உள்ள ஒரு கல்லறையில் இயற்கை உபாதையை கழித்தேன் இதுபோன்ற கொடுமைகள் எல்லாம் ஷூட்டிங்கிற்காக வெளி இடங்களுக்கு செல்லும் போது நடக்கும் என ட்ரூத் ஆர் டேர் ரவுண்டின் போது வெளிப்படையாக கூறி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார் காஜல் அகர்வால். பல்வேறு நடிகைகளும் இதுபோல வெளி இடங்களில் படப்பிடிப்பு நடத்தும் போது சரியான பாத்ரூம் வசதி இல்லை என புகார் அளித்துள்ள நிலையில், முன்னணி நடிகையான காஜல் அகர்வாலுக்கு கூட இப்படியொரு மோசமான சூழல் நடந்து இருப்பது பலரையும் ஷாக் ஆக்கி உள்ளது.

துப்பாக்கி ரீ ரிலீஸ் செய்யணும்: கில்லி படம் ரீ ரிலீஸாகி மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்திய நிலையில், துப்பாக்கி படத்தையும் ரீ ரிலீஸ் செய்ய வேண்டும் என்றும் விஜய்யுடன் தான் நடித்த படங்களில் தனக்கு ரொம்பவே பிடித்த படம் துப்பாக்கி தான் என காஜல் அகர்வால் கூறியுள்ளார். துப்பாக்கி, ஜில்லா மற்றும் மெர்சல் உள்ளிட்ட படங்களில் விஜய்யுடன் இணைந்து காஜல் அகர்வால் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X