இந்த வயசுல இந்த விளையாட்டு தேவையா காஜல் அகர்வால்?
Recommended Video
சென்னை: கமல்ஹாசனின் பிறந்த நாளை முன்னிட்டு, இந்தியன் 2 ஷூட்டிங் இன்று நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
தனது சொந்த ஊரான பரமக்குடியில், தனது பிறந்த நாளை கொண்டாட சென்றுள்ளார் கமலஹாசன்.
இந்தியன் 2 படப்பிடிப்பு இல்லாததால், பிஸி ஷூட்டிங்கில் இருந்து ஓய்வு பெற்ற நடிகை காஜல் அகர்வால், குழந்தையை போல குதிரை பொம்மையில் ஏறி சவாரி செய்யும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
எப்போ வரும்
பாலிவுட்டில் வெளிவந்த குயின் படத்தின் தமிழ் ரீமேக்கான பாரிஸ் பாரிஸ் படத்தில் காஜல் அகர்வால் நடித்திருந்தார். காஜல் அகர்வாலின் மார்பகத்தை சக நடிகை அழுத்துவது போன்ற காட்சிகள் இடம்பெற்ற டிரைலர் வெளியாகி மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியது. ஆனால், இன்னமும் அந்த படம் எப்போது திரைக்கு வரும் என்பது மில்லியன் டாலர் கேள்வியாகவே உள்ளது.

சுகன்யாவாக இல்லை
இந்தியன் 2 படத்தில் காஜல் அகர்வால் சுகன்யா கதாபத்திரத்தில் நடிக்க உள்ளார் என்ற வதந்திகள் உலாவின. ஆனால், களறி சண்டை பயிற்சி பெற்று நடித்து வரும் காஜல் அகர்வால், பாட்டி வேடத்திலோ அல்லது சுகன்யாவின் வேடத்திலோ நடிக்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
கமலுக்கு வாழ்த்து
காஜல் அகர்வால் தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் கமல்ஹாசனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். தங்களுடன் நடிப்பது மகிழ்ச்சி என்றும், வரும் ஆண்டு சிறந்த ஆண்டாக விளங்கட்டும் என்றும் வாழ்த்தியுள்ளார்.
அனுஷ்காவுக்கு வாழ்த்து
தமிழ், தெலுங்கு மொழிகளில் காஜல் அகர்வாலுக்கு போட்டி நடிகையான அனுஷ்காவிற்கும் காஜல் அகர்வால் பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளார். அதில், பேரழகி அனுஷ்காவுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். உங்கள் வாழ்க்கை சந்தோஷங்கள் மற்றும் அன்பால் நிறைந்திருக்கட்டும் என வாழ்த்தியுள்ளார். அதே போல தெலுங்கு பட இயக்குநர் த்ரிவிக்ரமுக்கும் பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

குதிரை பொம்மை
குழந்தைகள் விளையாடும் குதிரை பொம்மையில் சவாரி செய்து, கத்தி சண்டை போடுவது போன்ற வீடியோ க்ளிப்பை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வைரலாக்கி வருகிறார் காஜல் அகர்வால். மேலும், அந்த பதிவுடன் I Do My Own Stunts என்ற கேப்ஷனை கொடுத்துள்ளார். இதுதான் உங்க ஸ்டன்ட்டா என்றும் இந்த வயசுல இந்த விளையாட்டு தேவையா என்றும் சிலர் ட்ரோல் செய்து வருகின்றனர். சில ரசிகர்கள் ஜான்சி ராணி என்றும், க்யூட் என்றும் புகழ்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











