»   »  தல 57: முதன்முறையாக அஜித்துக்கு ஜோடியாகும் காஜல் அகர்வால்?

தல 57: முதன்முறையாக அஜித்துக்கு ஜோடியாகும் காஜல் அகர்வால்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சிறுத்தை சிவா-அஜீத்தின் புதிய படத்தில் காஜல் அகர்வாலை நாயகியாக ஒப்பந்தம் செய்திருப்பதாக, புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

'பழனி' படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமான காஜல் தற்போது கோலிவுட்டின் முன்னணி நாயகிகளில் ஒருவராக வலம் வருகிறார்.

Kajal Agarwal Romance with Ajith

விஜய், சூர்யா, கார்த்தி, தனுஷ், விஷால் என கோலிவுட்டின் முன்னணி நாயகர்களுடன் நடித்தாலும் காஜல் இதுவரை அஜித்துக்கு ஜோடியாக நடித்ததில்லை.

காஜலின் மனக்குறை தீருவதற்கான நேரம் தற்போது நெருங்கி வந்துள்ளது. ஆமாம் தல 57 படத்தில் அஜித்துக்கு ஜோடியாக காஜல் அகர்வாலை படக்குழு ஒப்பந்தம் செய்திருப்பதாக கூறப்படுகிறது.

இந்தப் படத்தின் 2 ஹீரோயின்களில் ஒருவராக அனுஷ்காவை ஏற்கனவே படக்குழு ஒப்பந்தம் செய்திருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், தற்போது காஜல் அகர்வாலும் நாயகிகள் பட்டியலில் இணைந்திருக்கிறார்.

சமீபத்தில் இப்படத்திற்கு பூஜை போடப்பட்டது.தொடர்ந்து படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை இந்த மாத இறுதியில் துவங்கவுள்ளனர்.விரைவில் படத்தின் ஹீரோயின்கள் யார்? என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Sources said Kajal Agarwal next Romance with Ajith in Thala 57.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil