twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நாங்க எப்பவுமே இப்படித்தான்... காஜல் எதப்பத்தி சொல்லியிருக்காங்க தெரியுமா!

    |

    சென்னை : தற்போது காஜல் அகர்வால் கர்ப்பமாக உள்ளார். ஆயினும் அவரது சுறுசுறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சம் இல்லாமல் உள்ளது. சமூக வலைதளங்களில் தினந்தோறும் கொண்டாட்டமான பதிவுகளை பதிவிட்டு வருகிறார்.

    மாறன் டைரக்டருக்கு பத்திரிக்கையாளர் மீது என்ன கோபம்...என்ன சொல்ல வர்றாரு? மாறன் டைரக்டருக்கு பத்திரிக்கையாளர் மீது என்ன கோபம்...என்ன சொல்ல வர்றாரு?

    நடிகை காஜல் அகர்வால்

    நடிகை காஜல் அகர்வால்

    நடிகை காஜல் அகர்வால் பொம்மலாட்டம், பழனி போன்ற படங்களில் தன்னுடைய அறிமுகத்தை கொடுத்து தொடர்ந்து நிற்கக்கூட நேரமில்லாமல் நடித்து வந்தார். விஜய், அஜித், சூர்யா என இவர் அடுத்தடுத்த படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்தார். தன்னுடைய அழகான சிரிப்பு மற்றும் கட்டுக்கோப்பான உடல் மூலம் ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்து வருகிறார்.

    ஹே சினாமிகா ரிலீஸ்

    ஹே சினாமிகா ரிலீஸ்

    சமீபத்தில் பிருந்தா இயக்கத்தில் துல்கர் சல்மானுடன் இவர் இணைந்து நடித்திருந்த ஹே சினாமிகா படம் ரிலீசாகியுள்ளது. படத்தில் இவரது நடிப்பு சிறப்பாக அனைவரையும் கவரும் வகையில் அமைந்திருந்தது. மிகச்சிறந்த விமர்சனங்களை இந்த படத்தின் மூலம் காஜல் அகர்வால் பெற்றுள்ளார்.

    கர்ப்பமான காஜல் அகர்வால்

    கர்ப்பமான காஜல் அகர்வால்

    கௌதம் கிச்சுலு என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு தற்போது கர்ப்பமாக உள்ளார் காஜல்அகர்வால். சமீபத்தில் இவருக்கு வளைகாப்பு நடைபெற்றது. அதன் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை ரசிகர்களுடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார் காஜல் அகர்வால்.

    வீடியோக்கள் + புகைப்படங்கள்

    வீடியோக்கள் + புகைப்படங்கள்

    தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் இவர் மிகவும் பிஸியாக செயல்பட்டு வருகிறார். தினந்தோறும் தனது கர்ப்பத்தை வெளிப்படுத்தும் வகையிலும் மறைமுகமாகவும் இவர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார். இவை அனைத்தும் ரசிகர்களை கவரும் வகையில் உள்ளது. அதிகமான லைக்ஸ்களையும் பெற்று வருகிறது.

    புதிய பதிவு

    புதிய பதிவு

    இந்நிலையில் தனது கணவர் மற்றும் தங்களது செல்ல நாய்க்குட்டியுடன் காஜல் புதிய புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். மேலும் இதுதான் நாங்கள் என்றும் கேப்ஷன் வெளியிட்டுள்ளார். கருப்பு வெள்ளையில் வெளியிடப்பட்டுள்ள இந்த புகைப்படம் மிகவும் அழகாக காணப்படுகிறது. புகைப்படத்தில் மிகவும் அழகான சிரிப்பையும் வெளிப்படுத்தியுள்ளார் காஜல். இந்தப் புகைப்படத்தை நடிகை தமன்னாவும் லைக் செய்துள்ளார்.

    இன்ஸ்டாகிராமில் பிசி

    இன்ஸ்டாகிராமில் பிசி

    இன்ஸ்டாகிராமில் ஒரு சில நடிகைகளில் மிகவும் ஈஸியாகவும் பரபரப்பாகவும் செயல்பட்டு வருகின்றனர். அந்த வரிசையில் காஜல் அகர்வாலும் ஒருவராக உள்ளார். இவரது வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களில் அழகு அள்ளுகிறது. ரூம் போட்டு யோசிப்பாரோ என்ற வகையில் இந்தப் புகைப்படங்கள் காணப்படுகின்றன.

    இந்தியன் 2வில் நீக்கம்

    இந்தியன் 2வில் நீக்கம்

    இந்தியன் 2 படத்தில் கமல்ஹாசனுடன் ஜோடி சேர்ந்து நடிப்பதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார் காஜல் அகர்வால். ஆனால் இவர் கர்ப்பமான சூழலில் அந்த படத்தில் இருந்து அவர் நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. விரைவில் இந்த படத்தின் ஷூட்டிங் துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Kajal aggarwal's new post in Instagram makes fans happy
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X