கோமாளி நூறாவது நாள்.. ரசிகர்களுக்கு போட்டோசூட் மூலம் நன்றி கூறிய காஜல்!
சென்னை : அறிமுக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் உருவாகி மாபெரும் வெற்றி அடைந்த படம் தான் கோமாளி.
இதில் ஜெயம் ரவி ,காஜல் அகர்வால்,சம்யுக்தா ஹெக்டே,கே.எஸ்.ரவிக்குமார், யோகிபாபு,ஷாரா,ஆர்.ஜே.ஆனந்தி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர் .தயாரிப்பாளர் ஜசரி கனேஷனின் தயாரிப்பில் உருவாகி இருந்தது கோமாளி திரைப்படம். ஆகஸ்ட் 15 வெளியான இந்த படம் மக்கள் வரவேற்பிலும் வியாபார ரீதியிலும் மிக பெரிய வெற்றி அடைந்தது.

தயாரிப்பாளர் ஜசரி கனேஷனுக்கு இந்த படத்தின் மூலம் மிக பெரிய பெயர் கிடைத்தது ,வேல்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் பெயர் எங்கோ சென்றது என்றே கூறலாம் .இவர் தயாரித்த எல்.கே.ஜி,கோமாளி,பப்பி ஆகிய மூன்று படங்களும் அடுத்தடுத்து வெளியாகி வியாபார ரீதியில் நல்ல
வெற்றியடைந்தது .
இதனால் சென்னையில் ஒரு விழா ஒன்றை அமைத்த தயாரிப்பாளர் ஜசரி கனேஷன் முதலமைச்சர் எடப்பாடி .கே. பழனிச்சாமியை விருந்தினராக அழைத்து அவரின் தயாரிப்பில் பணியாற்றிய அனைவருக்கும் பழனிச்சாமியின் கையால் விருது வழங்க வைத்து கௌரவபடுத்தினார் .
தற்போது காஜல் அகர்வால் தனது சமூக வலைத்தள பக்கத்தில் தனது புதிய போட்டோசூட் புகைப்படத்தை பதிவேற்றி கோமாளி 100நாட்கள் என்கிற ஹாஸ்டேக்கையும் பதிவேற்றியுள்ளார்.இதில் அவரது புதிய புகைப்படங்களையும் பதிவேற்றியுள்ளார்.புகைப்படங்களுக்கு ரசிகர்கள் ஆகா ஓகோ என்று கமண்ட் செய்து வருகின்றனர்.
தற்போது காஜல் ஹிந்தி குயின் தமிழ் ரீமேக்கான பேரீஸ் பேரீஸ் படத்தில் நடித்து வருகிறார்.மேலும் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2விலும் கமலுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
கண்களில் திடீர் வீக்கம் வீங்கி.. என்ன ஆனது?.. விசித்திர நோயால் போராடும் 6 மாத சிறுவன்..உதவுங்கள்!


Click it and Unblock the Notifications











