கண்ணப்பா டீசரை விடுங்க.. பார்வதி தேவியை பார்த்தீங்களா?.. டிரெண்டிங்கில் தெறிக்கும் காஜல் அகர்வால்!

ஹைதராபாத்: தெலுங்கு நடிகர் மோகன் பாபு 150 கோடி ரூபாயை கொட்டி தனது மகன் விஷ்ணு மஞ்சுவை வைத்து கண்ணப்பா படத்தை இயக்கியுள்ளார். அதன் பிரம்மாண்ட டீசர் இன்று வெளியானது. அக்‌ஷய் குமார், பிரபாஸ், மோகன்லால், சரத்குமார், ப்ரீத்தி முகுந்தன் என ஏகப்பட்ட நடிகர்கள் நடித்து இருந்தும் சோஷியல் மீடியாவில் டிரெண்டாகி வருவது யாரென்று பார்த்தால் பார்வதியாக அந்த படத்தில் நடித்த நம்ம காஜல் அகர்வால்.

துப்பாக்கி படத்துக்குப் பிறகு மீண்டும் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடித்துள்ள சிக்கந்தர் படத்தில் காஜல் அகர்வால் நடித்த நிலையிலும் அந்த படத்தின் டீசரில் ஒரு சீனில் கூட காஜல் அகர்வாலை காட்டவே இல்லையே என ரசிகர்கள் ரொம்பவே வருத்தப்பட்டனர்.

Kannappa Kajal Agarwal Indian 3

ஆனால், கண்ணப்பா டீசர் ட்விட்டர் டிரெண்டிங்கில் தெறிக்க காரணமாகவே காஜல் அகர்வால் தான் என்பது தான் செம ஹைலைட்.

கண்ணப்பா டீசர் எப்படி இருக்கு?: மோகன் பாபு தயாரிப்பில் முகேஷ் குமார் சிங் இயக்கத்தில் விஷ்ணு மஞ்சு, ப்ரீத்தி முகுந்தன் லீடு ரோலில் நடித்துள்ள கண்ணப்பா படத்தின் டீசர் இன்று வெளியானது. இந்த படத்தில் சிவனாக அக்‌ஷய் குமாரும் பார்வதியாக காஜல் அகர்வாலும் நடித்துள்ளனர். மோகன்லால் மற்றும் பிரபாஸ் கேமியோ ரோலில் வரும் காட்சிகளும் வெளியாகி டீசரை ஹிட்டாக்கியுள்ளது. இந்த படத்தை முழுக்க முழுக்க நியூசிலாந்தில் படமாக்கியுள்ளனர். கங்குவா படத்தின் வாடை அடிப்பதாகவும் ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். மோகன்லால், பிரபாஸ் மற்றும் அக்‌ஷய் குமார் தான் படத்தை காப்பாற்ற வேண்டும் என்கின்றனர்.

பார்வதியாக காஜல் அகர்வால்: சிவராத்திரியன்றே இந்த டீசரை வெளியிட்டு இருந்தால் இன்னமும் சிறப்பாக இருந்திருக்கும் என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர். அக்‌ஷய் குமார் அருகே பார்வதியாக காஜல் அகர்வால் இருந்ததையும் டீசரில் வந்த சில நொடிகளில் அவர் கொடுத்த ரியாக்‌ஷனை பார்த்த ரசிகர்கள் #KajalAggarwal ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர்.

இந்தியன் 3 வருமா?: திருமணத்துக்குப் பிறகு மீண்டும் காஜல் அகர்வால் சினிமாவில் நடிக்க ஆரம்பித்துள்ளார். சிக்கந்தர், கண்ணப்பா என வரிசையாக காஜல் அகர்வால் படங்கள் வெளியாகவுள்ள நிலையில், ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் உடன் அவர் இணைந்து நடித்த இந்தியன் 3 படமும் இந்த ஆண்டே வெளியானால் நல்லா இருக்கும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X