இந்தா புறப்பட்டாச்சு.. ஹனிமூனுக்கு ரெடியான நடிகை காஜல் அகர்வால்.. எந்த நாட்டுக்கு போறார்?

By

சென்னை: சமீபத்தில் திருமணம் செய்துகொண்ட நடிகை காஜல் அகர்வால், ஹனிமூனுக்கு செல்ல இருக்கிறார்.

நடிகை காஜல் அகர்வால், மும்பை தொழிலதிபர் கவுதம் கிட்சிலுவை காதலித்து வந்தார்.

இருவீட்டு குடும்பத்தினரும் சம்மதித்ததை அடுத்து திருமணம் செய்து கொள்ள முடிவு

செய்தனர்.

தொழிலதிபர் கிட்சிலு

தொழிலதிபர் கிட்சிலு

இவர்கள் திருமணம் அக்டோபர் 30 ஆம் தேதி மும்பையில் கோலாகலமாக நடந்தது. நெருங்கிய சொந்தங்கள் மற்றும் நண்பர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். காஜல் திருமணம் செய்திருக்கும் தொழிலதிபர் கவுதம் கிட்சிலு, உள் அலங்கார நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

புது வீட்டில்

புது வீட்டில்

திருமணத்துக்குப் பிறகும் தொடர்ந்து நடிக்க இருப்பதாகக் கூறியுள்ள காஜல், திருமணம் முடிந்த கையோடு, புதிய வீட்டில் குடியேறியுள்ளார். இதற்கான கிரகப்பிரவேசம் கடந்த சில நாட்களுக்கு முன் நடந்துள்ளது. இதில் காஜல் அகர்வால், கவுதம் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

எப்படி காதல்?

எப்படி காதல்?

திருமணம் குறித்த தகவல் மற்றும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் அடிக்கடி வெளியிட்டு வந்த காஜல், நிச்சயதார்த்தத்தின் போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். அந்த புகைப்படங்கள் வைரலானது. இந்நிலையில். தாங்கள் எப்படி காதலிக்கத் தொடங்கினோம் என்று காஜல் தெரிவித்திருந்தார்.

இன்ஸ்டா ஸ்டோரி

இன்ஸ்டா ஸ்டோரி

இந்நிலையில் கொரோனா பரவல் இருப்பதால், இப்போது அவர்கள் ஹனிமூனுக்கு செல்லமாட்டார்கள் என்று கூறப்பட்டது. இந்நிலையில் தனது இன்ஸ்டா ஸ்டோரியில் தங்கள் பாஸ்போர்ட் மற்றும் பவுச்சின் புகைப்படங்களை பதிவிட்டு, ரெடி டு கோ என்று குறிப்பிட்டுள்ளார்.

ஹனிமூன் ஸ்பாட்

ஹனிமூன் ஸ்பாட்

இதனால் அவர்கள் ஹனிமூன் செல்கின்றனர் என்பது தெரிய வந்துள்ளது. அவர்கள் எந்த நாட்டுக்குச் செல்கின்றனர் என்பது பற்றி தெரிவிக்கவில்லை. இருந்தாலும் ஹனிமூன் ஸ்பாட்டில் இருந்து புகைப்படங்களாக வெளியிட இருக்கின்றனர். அப்போது தெரியத்தானே போகிறது என்கின்றனர் ரசிகர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X