மகனை விளம்பரத்தில் நடிக்க வைத்த காஜல் அகர்வால்.. முகத்தை மறைப்பது ஏன் என ரசிகர்கள் கேள்வி?

சென்னை: வரும் ஜூன் மாதம் 19ம் தேதி வந்தால் 40 வயதை கடந்துவிடுவார் நடிகை காஜல் அகர்வால். க்யூன் ஹோ கயானா எனும் இந்தி படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமான காஜல் அகர்வால் தெலுங்கில் 2007ம் ஆண்டு வெளியான லக்‌ஷ்மி கல்யாணம் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.

தமிழில் பேரரசு இயக்கத்தில் பரத் நடித்த பழநி படத்தின் மூலம் கோலிவுட்டுக்குள் அடியெடுத்து வைத்த காஜல் அகர்வால் விஜய்யுடன் துப்பாக்கி, ஜில்லா, மெர்சல், அஜித் குமாருடன் விவேகம், கார்த்தியுடன் நான் மகான் அல்ல, அழகுராஜா, சூர்யாவுடன் மாற்றான் தனுஷ் உடன் மாரி மற்றும் ஜெயம் ரவியுடன் கோமாளி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

Kajal Aggarwal and his son joints for FIrst Cry advertisement

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் உடன் இணைந்து அவர் நடித்த இந்தியன் 3 மற்றும் குயின் படத்தின் தமிழ் ரீமேக்கான பாரிஸ் பாரிஸ் படங்கள் ரிலீஸ் ஆகாமல் அப்படியே கிடப்பில் கிடக்கின்றன. தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்து வரும் காஜல் அகர்வாலுக்கு திருமணமாகி ஒரு ஆண் குழந்தையும் இருக்கிறது.

காஜல் அகர்வால் குடும்பம்: "கூகுள் கூகுள் பண்ணி பார்த்தேன் உலகத்துல" என துப்பாக்கி படத்தில் இவர் போட்ட ஆட்டத்தை எல்லாம் ரசிகர்கள் என்றைக்கும் மறக்கவே மாட்டார்கள். சமீபத்தில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கானுடன் இணைந்தும் காஜல் அகர்வால் நடித்திருந்தார். அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. கடந்த 2020ம் ஆண்டு காஜல் அகர்வால் கெளதம் கிச்லு என்பவரை திருமணம் செய்துக் கொண்ட நிலையில், அவருக்கு நீல் எனும் ஆண் குழந்தையும் உள்ளார்.

கண்ணப்பாவில் பார்வதியாக: கடந்த ஆண்டு காஜல் அகர்வால் நடித்த சத்யபாமா இந்த ஆண்டு வெளியான சிக்கந்தர் உள்ளிட்ட படங்கள் படுதோல்வியை சந்தித்து வருகின்றன. மீண்டும் நடிக்க வந்த காஜல் அகர்வாலுக்கு பகவந்த் கேசரி படத்தைத் தவிர பெரிய வெற்றிப் படமாக எதுவும் அமையவில்லை. இந்நிலையில், அடுத்து கண்ணப்பா படத்தில் பார்வதி தேவியாக அக்‌ஷய் குமாருக்கு ஜோடியாக கேமியோ ரோலில் நடித்திருக்கிறார். மேலும், தி இந்தியா ஸ்டோரி மற்றும் இந்தியன் 3 உள்ளிட்ட படங்கள் அவர் நடிப்பில் வெளியாக காத்திருக்கின்றன.

விளம்பரத்தில் மகன்: நடிகை காஜல் அகர்வால் தற்போது ஃபர்ஸ்ட் கிரை எனும் குழந்தைகளுக்கான துணிகளை விற்கும் நிறுவனத்துடன் இணைந்து கைகோர்த்துள்ளார். அதற்காக தனது மகன் நீலை வைத்து விதவிதமான துணிகளை அணிந்துக் கொண்டு எடுத்துள்ள புகைப்படங்களை வெளியிட்டு ஃபர்ஸ்ட் க்ரை நிறுவனத்தின் சம்மர் ஆஃபர்களை விளம்பரப்படுத்தியுள்ளார்.

முகத்தை மறைத்துக் கொண்டு: ஏற்கனவே நடிகை காஜல் அகர்வால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகனின் புகைப்படங்களை பலமுறை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளார். ஆனால், தற்போது அவர் விளம்பரப் படத்தில் மட்டும் மகனின் முகத்தை மறைத்தது ஏன் என்கிற கேள்வியை ரசிகர்கள் கிளப்பியுள்ளனர். இந்த வயதிலேயே உங்கள் மகனை மாடலாக மாற்றிவிட்டீர்களே என்றும் வருங்கால ஹீரோ ரெடி என்றும் ரசிகர்கள் கமெண்ட்டுகளை குவித்து வருகின்றனர். காஜல் அகர்வால் சிக்கந்தர் படத்தின் புரமோஷனுக்காக படுகவர்ச்சியான உடையில் வந்த போது அடுத்த படத்துக்கு அடிபோடுகிறாரா என பலரும் கலாய்த்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X