கடவுளே எல்லாம் நல்லதா நடக்கனும்..நடிகை காஜல் அகர்வால் கணவருடன் சாமி தரிசனம்!

ஆந்திரா : நடிகை காஜல் அகர்வால் தனது கணவருடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்தார்.

லைக்கா தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன், காஜல் அகர்வால், சித்தார்த், பிரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத் சிங் மற்றும் பலர் நடிக்கும் படம் இந்தியன் 2.

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு பல்வேறு காரணங்களால் நிறுத்தப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் மீண்டும் ஆரம்பமானது.

இந்தியன் 2

இந்தியன் 2

இயக்குநர் ஷங்கர் எஞ்சியிருக்கும் காட்சிகளைப் படமாக்க போடப்பட்ட பட்ஜெட்டில் பெரும் தொகையை குறைத்துவிட்டதால், தயாரிப்பு நிறுவனமும் அந்தத் தொகையை உடனடியாக வழங்கியதை அடுத்து, சென்னையில் சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு உள்ளது.

விறுவிறுப்பான படப்பிடிப்பு

விறுவிறுப்பான படப்பிடிப்பு

அதில் படத்தின் பல முக்கியக் காட்சிகள் படமாக்கப்பட உள்ளது. இரண்டு ஆண்டுகள் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டிருந்த நிலையில், எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரத்தில் படப்பிடிப்பை முடித்துத் தருவதாக ஷங்கர் உறுதியளித்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது, படத்தின் பிளாஷ் பேக் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.

களரி பயிற்சி

களரி பயிற்சி

இந்த படப்பிடிப்பில் காஜல் அகர்வால் தனது களரிப் பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இந்த வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு, 3 ஆண்டுகளாக இடைவிடாமல் முழு மனதுடன் இந்த கலையை எனக்கு கற்றுக்கொடுத்த எனது ஆசிரியருக்கு நன்றி என கூறியிருந்தார்.

கணவருடன் திருப்பதியில்

கணவருடன் திருப்பதியில்

இந்நிலையில், நடிகை காஜல் அகர்வால், கணவருடன் ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி தேவஸ்தானத்தில் சுவாமி தரிசனம் செய்துள்ளார். இவர் சுவாமி தரிசனத்தை முடித்து வெளியே வர, அவரை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டு செல்ஃபி எடுக்க முயன்றனர். இதையடுத்து. தன் கணவருடன் அங்கிருந்து புறப்பட்ட காஜலை ரசிகர்கள் பின் தொடர்ந்ததால், அவர்களுடன் சிரித்த முகத்துடன் செல்ஃபி எடுத்துக்கொண்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X