Don't Miss!
- News சிறையில் இருந்தே டெல்லியில் ஆட்சி.. கெஜ்ரிவாலுக்கு அனுமதி கோரி உயர்நீதிமன்றத்தில் பரபரப்பான மனு
- Sports இதெல்லாம் நிஜமா.. என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.. வருங்கால ஆஸி. அதிரடி மன்னன்
- Automobiles சுஸுகி பைக்குகளில் இது தனி ரகம்!! இந்தியாவில் விலையை கேட்டால் மயக்கமே வந்துவிடும்!
- Lifestyle மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் வெற்றிகள் குவியும்..
- Technology Google-ன் அடுத்த அடி.. உங்க Gmail அக்கவுண்ட்ல 4000-க்கும் அதிகமான இமெயில் இருக்கா? அப்போ இதுதான் ஒரே வழி!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
15 ஆண்டுகள்.. இந்திய திரையுலகையே கலக்கிய காஜல் அகர்வால்.. ஹே சினாமிகாவுக்கு ரசிகர்கள் வெயிட்டிங்!
சென்னை: லக்ஷ்மி கல்யாணம் படம் மூலம் டோலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமான காஜல் அகர்வால் இன்றுடன் சினிமாவில் என்ட்ரி கொடுத்து 15 ஆண்டுகள் ஆகிவிட்டன.
நடிகை தமன்னா, நடன இயக்குநர் பிருந்தா மாஸ்டர் உள்ளிட்ட பல பிரபலங்கள் அவரது காமன் டிபியை வெளியிட்டு வாழ்த்தி உள்ளனர்.
#15YearsOfKajalAggarwal எனும் ஹாஷ்டேக்கை போட்டு ரசிகர்கள் நடிகை காஜல் அகர்வாலை வாழ்த்தி வருகின்றனர்.
“பாடி ஷேமிங் செய்யும் முட்டாள்கள்“…. கேலி செய்தவர்களை விளாசிய காஜல் அகர்வால் !
15 ஆண்டு காலம்
கடந்த 2004ம் ஆண்டு வெளியான க்யூன் ஹோ கயா நா எனும் பாலிவுட் படத்தில் ஹீரோயின் தோழியாக நடித்து சினிமாவில் அறிமுகமானார் நடிகை காஜல் அகர்வால். விவேக் ஓபராய், ஐஸ்வர்யா ராய் நடித்த அந்த படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்த காஜல் அகர்வால் 2007ம் ஆண்டு டோலிவுட்டில் வெளியான லக்ஷ்மி கல்யாணம் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். 2007ம் ஆண்டு முதல் 2022 வரை ஹீரோயினாக 15 ஆண்டுகாலம் சினிமாவில் அசத்தி உள்ளார் காஜல் அகர்வால்.
தமிழில்
2008ம் ஆண்டு தமிழில் பரத் நடிப்பில் இயக்குநர் பேரரசு இயக்கிய பழனி படத்தில் அறிமுகமானார் நடிகை காஜல் அகர்வால். வெங்கட் பிரபுவின் சரோஜா படத்தில் கேமியோவாக வந்து சென்றார் காஜல் அகர்வால். ஆனால், எல்லாவற்றுக்கும் முன்னதாக அவர் நடிப்பில் உருவான பாரதிராஜாவின் பொம்மலாட்டம் திரைப்படமும் அதே ஆண்டு நீண்ட தாமதத்திற்கு பிறகு வெளியானது குறிப்பிடத்தக்கது.
ராஜமெளலி பட ஹீரோயின்
நடிகர் ராம்சரணை வைத்து மகதீரா எனும் பிரம்மாண்ட காதல் காவியத்தை உருவாக்கிய இயக்குநர் ராஜமெளலி அந்த படத்தில் காஜல் அகர்வாலை நடிக்க வைத்தார். தமிழ் மற்றும் தெலுங்கில் மிகப்பெரிய ஹிட் அடித்த அந்த படம் காரணமாக தமிழில் முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பை பெற்றார் காஜல் அகர்வால்.
விஜய், சூர்யா படங்களில்
தம்பி கார்த்தியுடன் நான் மகான் அல்ல படத்தில் நடித்த காஜல் அகர்வாலுக்கு அண்ணன் சூர்யாவுடன் மாற்றான் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. மாற்றான் படம் வெளியான அதே 2012ம் ஆண்டு தளபதி விஜய் நடிப்பில் வெளியான துப்பாக்கி திரைப்படம் காஜல் அகர்வாலுக்கு கோலிவுட்டில் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் வெற்றியை கொடுத்தது. ஜில்லா மற்றும் மெர்சல் என விஜய் உடன் மூன்று படங்களில் நடித்துள்ளார். மேலும், தனுஷ் உடன் மாரி, அஜித்துடன் விவேகம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் காஜல் அகர்வால்.
கர்ப்பமான காஜல்
40 வயதை கடந்த நிலையிலும், பல நடிகைகள் திருமணத்தை தள்ளிப் போட்டு வரும் நிலையில், 36 வயதாகும் நடிகை காஜல் அகர்வால் கடந்த ஆண்டு கெளதம் கிட்ச்லுவை திருமணம் செய்து கொண்ட நிலையில், தற்போது கர்ப்பமாக உள்ளார். விரைவில் அம்மாவாகப் போகும் காஜல் அகர்வாலை ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.
ஹே சினாமிகாவுக்கு வெயிட்டிங்
இந்தியன் 2 படத்தில் கமலுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்திருந்த நிலையில், அந்த படம் அப்படியே கிடப்பில் கிடக்கிறது. காஜல் அகர்வாலுக்கு பதில் த்ரிஷா மாற்றப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. பாரிஸ் பாரிஸ் படத்தின் டீசர் மட்டுமே வந்த நிலையில், அந்த படம் என்ன ஆச்சுன்னே தெரியவில்லை. இந்நிலையில், காஜல் அகர்வால் நடிப்பில் வரும் மார்ச் 3ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ராம்சரண், சிரஞ்சீவி நடிப்பில் உருவாகி உள்ள ஆச்சார்யா படமும் இந்த ஆண்டு வெளியாகி காஜல் அகர்வால் ரசிகர்களுக்கு செம ட்ரீட் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.