பீச்சில் காதலை உறுதி செய்த காஜல் அகர்வால்.. காதலரை கண்டுபிடித்த ரசிகர்கள்.. விரைவில் திருமணம்?
நடிகை காஜல் அகர்வால் தான் காதலில் இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.
Recommended Video
சென்னை: நடிகை காஜல் அகர்வால் தான் காதலில் இருப்பதை ஒரு புகைப்படம் மூலம் உறுதிப்படுத்தியுள்ளார் என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.
தமிழ் சினிமாவின் பல ஆண்டுகளாக வெற்றி நாயகியாக வலம் வருபவர் நடிகை காஜல் அகர்வால். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு திரையுலகிலும் அதிக ரசிகர்களை கொண்டிருக்கிறார்.
காஜல் தற்போது கமலின் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். இதற்காக அவர் தற்காப்பு கலைகள் கற்று வருகிறார். இந்தியன் 2 படத்தை தவிர வேறு எந்த புதிய படத்திலும் காஜல் கமிட்டாகவில்லை.

காஜலின் திருமணம்
திருமணம் செய்துகொண்டு வாழ்க்கையில் செட்டிலாகலாம் என்ற ஐடியாவில் இருக்கும் அவர், தனது வருங்காலக் கணவர் எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என ஒரு பெரிய பட்டியலே வெளியிட்டார். காஜலுக்கு மாப்பிள்ளை கிடைத்துவிட்டதாக சமீபத்தில் செய்தி வெளியானது.
தொழிலதிபர் மாப்பிள்ளை
தொழிலதிபர் ஒருவருடன் காஜலின் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையொட்டி அவர் குடும்பத்துடன் சென்று அஜ்மீர் தர்காவில் தலையில் பூக்கூடையை சுமந்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினார். இந்த புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகின.

கைகளில் ஹார்ட்டின்
இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காஜல் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று பல்வேறு யூகங்களுக்கு வழிவகுத்துள்ளது. ஒரு கடற்கரையில் சூர்ய உதயத்தின் போது, கடலை பார்த்தப்படி நிற்கும் காஜல், கைகளை மேலே உயர்த்தியபடி நிற்கிறார். அவரது கை விரல்கள், ஹாட்டின் வடிவத்தை குறிக்கின்றன.

காதலில் காஜல்
இதை பார்த்த ரசிகர்கள், ‘தான் காதலில் இருப்பதை தான் காஜல் சூசகமாக வெளிப்படுத்தி இருக்கிறார்' என கமெண்ட் செய்து வருகின்றனர். தனக்கு நிச்சயமாகியிருக்கும் மாப்பிள்ளையை காஜல் காதலிப்பதாகவும் அவர்கள் யூகம் தெரிவித்துள்ளனர்.

விரைவில் திருமணம்
இந்த புகைப்படத்தின் மூலம் தனக்கு கூடிய சீக்கிரம் திருமணம் நடைபெற உள்ளதை காஜல் குறிப்பிட்டுள்ளார் என சினிமா வட்டாரத்தில் பேச்சாக இருக்கிறது. அநேகமாக இந்தியன் 2 படம் முடியும் முன்னரே காஜல், வீட்டில் விசேஷம் நடந்துவிடும் என்கிறார்கள் கோலிவுட் காரர்கள்.


Click it and Unblock the Notifications











