பட்டாம்பூச்சி ஜாக்கெட்.. ரெட் ஹாட்.. என்ன காஜல் அகர்வால் நகை கடை விளம்பரமா? என ரசிகர்கள் கலாய்!

சென்னை: காஜல் அகர்வால் தனது லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வைரலாக்கி வருகிறார்.

அதிலும் அந்த பட்டாம்பூச்சி ஜாக்கெட் புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

மேலும், டார்க் ரெட் கலரில் நகை கடை விளம்பரத்திற்கு எடுத்தது போல உள்ள போட்டோஷூட் புகைப்படமும் ரசிகர்களிடையே லைக்குகளை பெற்று வருகிறது.

கோமாளி ஹீரோயின்

கோமாளி ஹீரோயின்

கடந்த ஆண்டு காஜல் அகர்வாலுக்கு மிகப்பெரிய வெற்றியை ஜெயம் ரவியின் கோமாளி படம் பெற்றுத் தந்தது. கோமாளி படத்தில் ஹிப் ஹாப் தமிழா இசையில் வெளியான பைசா நோட்டை தேடிப் பார்த்தேன் பாடலுக்கு செம்ம குத்தாட்டம் போட்ட காஜல் அகர்வாலுக்கு தனி ரசிகர் மன்றங்களே உருவாகி இருக்கும்.

கமலுடன்

கமலுடன்

கோமாளி படத்தின் வெற்றியை தொடர்ந்து உலக நாயகன் கமலுடன் காஜல் அகர்வால் நடித்து வரும் இந்தியன் 2 படம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பல நட்சத்திரங்களுடன் காஜல் அகர்வால் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

எப்போ ரிலீசாகும்?

எப்போ ரிலீசாகும்?

பாலிவுட்டில் கங்கனா ரனாவத்தின் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த குயின் படத்தின் தமிழ் ரீமேக்கான பாரிஸ் பாரிஸ் படத்தில் கங்கனா ரனாவத் நடித்திருந்த ரோலில் காஜல் அகர்வால் நடித்துள்ளார். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட அந்த படம் இதுவரை ரிலீஸ் ஆகவில்லை. எப்போது ரிலீசாகும் என்பது பில்லியன் டாலர் கேள்வி.

பட்டாம்பூச்சி ஜாக்கெட்

இந்தியன் 2 படத்தில் செம்ம பிஸியாக நடித்து வரும் காஜல் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் க்யூட் மற்றும் ஹாட் புகைப்படங்களை பதிவிட்டு தனது ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருவார். தற்போது பட்டாம்பூச்சி டிசைனில் ஜாக்கெட் போன்ற டாப் ஒன்றை அணிந்து போஸ் கொடுத்துள்ள காஜல் அகர்வாலின் புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

குவிகிறது லைக்ஸ்

பட்டாம்பூச்சி வடிவ டாப் அணிந்து செம்ம க்யூட்டாக போஸ் கொடுத்துள்ள காஜல் அகர்வாலின் இந்த புகைப்படத்திற்கு 21 மணி நேரத்தில் 3 லட்சத்திற்கும் மேலான லைக்குகள் குவிந்துள்ளன. மேலும், ட்விட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இந்த புகைப்படத்தை காஜல் அகர்வாலின் ரசிகர்கள் வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.

காதலர் தின ட்ரீட்

காதலர் தின ட்ரீட்

இந்தியன் 2 மற்றும் பாரிஸ் பாரிஸ் படங்களுக்கு முன்னதாக வெங்கட் பிரபுவின் ‘லைவ் டெலிகாஸ்ட்' வெப் சீரிஸ் மூலம் தமிழ் ரசிகர்களை வசீகரிக்க உள்ளார் காஜல் அகர்வால். கயல் ஆனந்தி, வைபவ் மற்றும் யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த வெப் சீரீஸ் ஹாட் ஸ்டாரில் வரும் காதலர் தினமான பிப்ரவரி 14ம் தேதி முதல் ஒளிபரப்பாக உள்ளது.

Recommended Video

Kajal Marriage:திருமணத்திற்கு தயாராகி வரும் நடிகை காஜல் அகர்வால்

ரெட் ஹாட்

பட்டாம்பூச்சி டிசைன் ஆடையை தொடர்ந்து டார்க் ரெட் கலரில் செம்ம ஹாட்டாக இருக்கும் போட்டோஷூட் புகைப்படத்தையும் பதிவிட்டு வைரலாக்கி வருகிறார் காஜல் அகர்வால். நகைக் கடை விளம்பரங்களில் தொடர்ந்து நடித்து வரும் காஜல் அகர்வால் புதிய விளம்பரத்திற்கான போட்டோஷூட்டா இது என ரசிகர்கள் கமெண்ட் செய்து கேட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X