Don't Miss!
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Automobiles டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
85 வயது பாட்டியாக நடிக்க ஸ்பெஷல் மேக்கப்... இந்தியன் 2 ஷூட்டிங்கில் இணைந்தார் காஜல் அகர்வால்
Recommended Video
சென்னை: நடிகை காஜல் அகர்வால், இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங்கில் இணைந்துள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை அவர் வெளியிட்டுள்ளார்.
தமிழில், பொம்மலாட்டம், நான் மகான் அல்ல, மாற்றான், துப்பாக்கி, பாயும் புலி, ஜில்லா உட்பட பல படங்களில் நடித்திருப்பவர் காஜல் அகர்வால்.
தமிழ் தவிர, இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். அடுத்து அவர் நடித்துள்ள, பாரிஸ் பாரிஸ் படம் ரிலீஸ் ஆக இருக்கிறது.
மேடம் டுசாட்ஸ்
இதற்கிடையே, சிங்கப்பூர் மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் நிறுவப்பட்ட அவரது மெழுகு சிலை கடந்த சில நாட்களுக்கு முன் திறந்து வைக்கப்பட்டது. இதில் கலந்துகொண்ட காஜல் தனது மெழுகு சிலையுடன் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டார். இதை அவர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்தார். இது வைரலானது.
இந்தியன் 2
இந்நிலையில் கமல்ஹாசன் ஜோடியாக இந்தியன் 2 படத்திலும் அவர் நடிக்கிறார். இதில் 85 வயது பாட்டியாக நடிக்கிறார். ஷங்கர் இயக்கும் இந்தப் படத்தில் ஏற்கனவே ரகுல் பிரீத் சிங், இன்னொரு ஹீரோயினாக நடிக்கிறார். பிரியா பவானி சங்கர் உட்பட பலர் நடிக்கின்றனர். லைகா புரொடக்ஷன்ஸ் பிரமாண்ட பட்ஜெட்டில் படத்தைத் தயாரிக்கிறது.
|
மேக்கப் அறை
இந்தப் படத்தின் அடுத்த கட்ட ஷூட்டிங் சென்னையில் சமீபத்தில் தொடங்கியது. இதில் நடிகை காஜல் அகர்வால் நேற்று கலந்துகொண்டார். சென்னையில் உள்ள ஸ்டூடியோ ஒன்றில் நடக்கும் படப்பிடிப்பில் கலந்துகொண்ட அவர், மேக்கப் அறையின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அவர் முகத்தை மறைத்தபடி அந்தப் புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார்.
சவாலான கேரக்டர்
கமல்ஹாசனுடன் அவர் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய காஜல் அகர்வால், இந்தியன் 2 படத்தில் 85 வயதுடைய பெண்ணாக நடிக்கிறேன். இந்த கேரக்டரில் நடிப்பது சவாலானதுதான். இதற்குமேல் படம் பற்றி சொன்னால், படக்குழுவினர் என்னை கொன்று விடுவார்கள் என்று கூறியிருந்தார்.