உங்களுக்கு அறிவு இல்லையா? இந்தி நடிகையை படுமோசமாக திட்டிய காஜல் அகர்வால்!

சென்னை: தமிழ் நடிகைகள் குறித்து பேசிய இந்தி நடிகையை காஜல் அகர்வால் கடுமையான திட்டினார். தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் காஜல் அகர்வால், 2008ம் ஆண்டு பரத்தின் பழனி படத்தின் மூலம் தமிழில் தனது அறிமுகத்தை கொடுத்தார்.

இதையடுத்து, தெலுங்கு பக்கம் சென்ற காஜல், ராம்சரணுடன் மகதீரா படத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய பெயரை பெற்றுத்தந்தது.

Kajal Aggarwal lashed out at a Hindi actress who teased Tamil actresses

நடிகை காஜல் அகர்வால்: மகதீரா படத்தின் வெற்றிக்குப்பிறகு முன்னணி நடிகை என பெயர் எடுத்த காஜல் அகர்வால், விஜய்க்கு ஜோடியாக துப்பாக்கி, ஜில்லா படங்களில் நடித்தார். போலீஸ் உமனாகவும், ஸ்போர்ட்ஸ் கேர்ளாகவும் இவர் நடித்து ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றிருந்தார். மேலும், அஜித், சூர்யா, தனுஷ் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் தனக்கென தனி இடத்தை பிடித்தார்.

இந்தியன் 2: திருமணம் மற்றும் குழந்தை பிறப்புக்குபின்னும் திரைப்படங்களில் நடித்து வருகிறார். ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்துள்ளார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசை அமைக்கிறார். இதில் ரகுல் ப்ரீத் சிங், காஜல் அகர்வால், பாபி சிம்ஹா, சித்தார்த், பிரியா பவானி சங்கர் உட்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் முடிவடைந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

தமிழ் நடிகைகள் குறித்து கிண்டல்: இந்நிலையில், ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த காஜல் அகர்வாலிடம் பாலிவுட் நடிகை ஹீனா கான் தமிழ் சினிமாவில் நடிகைகள் அனைவரும் குண்டாக இருக்கிறார்கள் என்று கிண்டலாக பேசியது குறித்து செய்தியாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த நடிகை காஜல் அகர்வால் இந்த காலத்திலும் உடலமைப்பை வைத்து ஒருவரை பற்றி கருத்து சொல்லும் அளவுக்கு சிலர் அறிவு இல்லாதவர்களாக இருக்கிறார்கள்.

பார்வை குறைபாடு: இது அவர்களுடைய பார்வையின் குறைபாடுதானே தவிர, தென்னிந்திய நடிகைகளின் குறைபாடு இல்லை. ஒவ்வொரு ஊர் மக்களுக்கும் ஒவ்வொரு விதமான ரசனை இருக்கும். அந்த வகையில் தென்னிந்திய சினிமா ரசிகர்களுக்கு நடிகைகள் எப்படி இருந்தால் பிடிக்குமோ அப்படி தான் இருக்க முடியும். தவிர குறிப்பிட்ட தனிப்பட்ட நடிகைகளின் எதிர்பார்ப்புக்கு இணங்க தமிழ் நடிகைகள் இருக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது என இந்தி நடிகைக்கு சரியான பதில் அடி கொடுத்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X