அய்யோ பேய்.. அலறும் நெட்டிசன்ஸ்.. காஜல் அகர்வாலுக்கு யாருடா இப்படி மேக்கப் போட்டது?
சென்னை: நடிகை காஜல் அகர்வாலின் புதிய புகைப்படங்கள், ரசிகர்களை அலற வைத்துள்ளது. மேலும், சரியான ட்ரோல் மெட்டீரியலாகவும் மாறியுள்ளது.
ஜெயம் ரவி, காஜல் அகர்வால் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான கோமாளி திரைப்படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது.
கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்தில் வயதான தோற்றத்தில் காஜல் அகர்வால் நடித்து வந்த நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக ஷூட்டிங் எல்லாம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
காஜல் அகர்வாலா இது?
சிரஞ்சீவியின் புதிய படத்தில் திரிஷாவுக்கு பதிலாக காஜல் அகர்வால் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்ற அப்டேட் கிடைத்துள்ள நிலையில், கொரோனா கலவரத்திலும், புதிய போட்டோஷூட்டை நடிகை காஜல் அகர்வால் நடத்தியுள்ளார். அந்த புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்ட காஜலை நெட்டிசன்கள் பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.
அய்யோ பேய்
நடிகை காஜல் அகர்வாலின் இந்த புதிய போட்டோஷூட்டில், அவரது மேக்கப் சொதப்பல் காரணமாக, மிகவும் வயதானவர் போல பயங்கரமாக தெரிகிறார். அதை பார்த்த ரசிகர்கள், அய்யோ பேய் என்று பல மீம்களை போட்டு ட்ரோல் செய்து வருகின்றனர். சுமார் 700க்கும் அதிகமான ரசிகர்கள் கமெண்ட் பாக்ஸை கலாய் பாக்ஸாக மாற்றியுள்ளனர்.
என்ன கொடுமை சார்
காஜல் அகர்வாலின் இந்த போட்டோஷூட், நெட்டிசன்களுக்கு ட்ரோல் மெட்டீரியலாக மாறியுள்ளது. ஐ விக்ரமின் விகாரமான போட்டோவை போட்டு, என்ன கொடுமை சார் என்பது போல கலாய்த்து வருகின்றனர். கோலிவுட் ரசிகர்கள் மட்டுமின்றி டோலிவுட் ரசிகர்களும் காஜல் அகர்வாலை பங்கமாக கலாய்த்து தள்ளுகின்றனர்.
கர்ண கொடூரம்
கர்ண கொடூரமா இருக்கு இனிமே இப்படி மேக்கப் போடாத என்றும், பயமா இருக்கு மேடம் ப்ளீஸ் இந்த போட்டோவை டெலிட் பண்ணுங்க என்றும், காஜல் அகர்வால் செல்லத்துக்கு யாருடா, இப்படி மேக்கப் போட்டது என்றும் ரசிகர்கள் பலவிதமான கமெண்ட்டுகளை போட்டு, வறுத்தெடுத்து வருகின்றனர்.
கொரோனா மீம்
எல்லாவற்றுக்கும் ஒரு படி மேலே சென்று, இந்த நெட்டிசன், கொரோனா இவள என்ன பண்ணலாம் என லொள்ளு சபா மனோகர் புகைப்படத்தை போட்டு பங்கம் செய்துள்ளார். கொரோனா வைரஸ் காரணமாக, மக்கள் வீட்டில் முடங்கி கிடக்கும் நேரத்திலும் உங்களுக்கு, இப்படியொரு போட்டோஷூட் தேவையா என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











