சும்மா இருக்குற நேரத்துல.. சமோசா செஞ்ச காஜல் அகர்வால்.. இன்னும் என்னலாம் பண்ணப் போகுதோ இந்த கொரோனா!
சென்னை: கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு போடப்பட்டிருக்கும் நிலையில், பல பிரபலங்கள் சமையலில் மாஸ்டர்களாக மாறி வருகின்றனர்.
ஐஸ்வர்யா ராஜேஷ் டல்கோனா காஃபி செய்றதும், கீர்த்தி சுரேஷ் வாழைப் பழ தோசை செய்றதுமாக அசத்தி வரும் நிலையில், நடிகை காஜல் அகர்வால் அழகான சமோசா செய்து அசத்தி உள்ளார்.

கோமாளி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார் காஜல் அகர்வால்.
லாக் டவுனுக்கு முன்பாக துல்கர் சல்மானின் ஹேய் சினாமிகா படத்திலும் நடிக்க ஒப்பந்தமானார்.
பிருந்தா மாஸ்டர் இயக்கத்தில் உருவாக உள்ள இந்த படத்தின் ஷூட்டிங்கும் கொரோனாவால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
குயின் படத்தின் தமிழ் ரீமேக்கான பாரீஸ் பாரீஸ் படத்தில் காஜல் அகர்வால் நடித்திருந்த நிலையில், தயாரிப்பு தரப்பில் ஏற்பட்ட பிரச்சனைகளால் அந்த படம் ரிலீசாகாமல் அப்படியே கிடப்பில் கிடக்கிறது.
View this post on InstagramA post shared by Kajal Aggarwal (@kajalaggarwalofficial) on
லாக்டவுன் காரணமாக பிசி ஷூட்டிங் வாழ்க்கை இல்லாமல் ஓய்வெடுத்து வரும் நடிகை காஜல் அகர்வால் சூடான சுவையான சமோசாவை முதன் முறையாக முயற்சி செய்து வெற்றியும் கண்டுள்ளார். அதன் புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்து லைக்குகளை அள்ளி வருகிறார்.


Click it and Unblock the Notifications











