‘இந்தியன் 2‘ படத்திலிருந்து விலகினார் காஜல் அகர்வால்… மீண்டும் உருவான புதிய சிக்கல் !

சென்னை : இந்தியன் 2 படத்திலிருந்து காஜல் அகர்வால் வெளியேறி உள்ளதாக பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியன் 2 படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது, படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார்.

இப்படத்தில், கமல்ஹாசன், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், சித்தார்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்தியன் 2

இந்தியன் 2

கமல் ஷங்கர் கூட்டணியில் உருவாகி வரும் படம் இந்தியன் 2. இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. கடந்த ஆண்டு படப்பிடிப்பு தளத்தில் கிரேன் விபத்து ஏற்பட்ட போது நிறுத்தப்பட்ட, இப்படத்தின் படப்பிடிப்பு அதன்பின் தொடங்கப்படவில்லை. மேலும் தயாரிப்பு தரப்புடன் ஏற்பட்ட மோதல் காரணமாக இந்தியன் 2 படத்தை கிடப்பில் போட்ட இயக்குனர் ஷங்கர், ராம்சரணை வைத்து தெலுங்கு படம் ஒன்றை இயக்கி வருகிறார்.

பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு

பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு

இந்தியன் 2 படத்தை முடித்து கொடுக்காமல் வேறு படங்களை இயக்க ஷங்கருக்கு தடை விதிக்க வேண்டும் என்று தயாரிப்பு நிறுவனம் தரப்பில் கோர்ட்டில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இந்த பிரச்சனையை இருதரப்பும் பேசி தீர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தியதோடு, ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவரை மத்தியஸ்தராக நியமித்தது.

டிசம்பரில் படப்பிடிப்பு

டிசம்பரில் படப்பிடிப்பு

இருதரப்பினர் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு ஏற்பட்டதை அடுத்து, நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கமல்ஹாசன் மற்றும் ஷங்கரின் இந்தியன் 2 திரைப்படம் மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளது. டிசம்பர் முதல் படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காஜல் அகர்வால் விலகல்

காஜல் அகர்வால் விலகல்

இந்நிலையில், இந்தியன் 2 படத்திலிருந்த காஜல் அகர்வால் வெளியேறி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. காஜல் அகர்வால், தற்போது கர்ப்பமாக இருப்பதாகவும் , இதனால், அவரால் படப்பிடிப்பில் கலந்த கொள்ள முடியாத சூழல் உருவாகி உள்ளது. இதன்காரணமாக அவருக்கு பதிலாக வேறு நடிகையை நடிக்க வைக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Recommended Video

Bagheera Trailer Launch Pressmeet | ஒரு படத்தில் 6 Heroine-ஆ | Prabhudeva, Adhik Ravichandran
உறுதிப்படுத்தவில்லை

உறுதிப்படுத்தவில்லை

காஜல் அகர்வால் கர்ப்பமாக இருக்கும் செய்தியை இன்னும் உறுதிப்படுத்தவில்லை என்றாலும், அவர் சமீபகாலமாக பொது இடங்களில் தென்படாமல் இருந்து வருகிறார். இந்தியன் 2 திரைப்படத்தில் காஜல் அகர்வால் வயதான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதற்காக அவருக்கு சற்று கடினமாக மேக்கப் போடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X