நான் கர்ப்பமாக இருக்கேனா? வலம் வரும் வதந்திகளுக்கு நடிகை காஜல் அகர்வால் என்ன சொல்றாரு பாருங்க!

சென்னை: நடிகை காஜல் அகர்வால் கர்ப்பமாக உள்ளார் என வதந்திகள் வெளியாகி வரும் நிலையில், அது தொடர்பாக முதல் முறையாக மனம் திறந்து பேசியுள்ளார் காஜல் அகர்வால்.

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான காஜல் அகர்வால் தொழிலதிபர் கெளதம் கிட்சுலுவை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு புதிய படங்களில் ஒப்பந்தம் ஆவதை முற்றிலுமாக தவிர்த்து விட்டார் காஜல் அகர்வால்.

காஜல் அகர்வால் திருமணம்

காஜல் அகர்வால் திருமணம்

பிரபல தொழிலதிபர் கெளதம் கிட்சுலுவை கடந்த ஆண்டு அக்டோபர் 30ம் தேதி லாக்டவுன் சமையத்தில் நடிகை காஜல் அகர்வால் திருமணம் செய்து கொண்டார். ஹனிமூனுக்காக இருவரும் மாலத்தீவு சென்றனர். கணவரை மிகவும் காதலித்து வரும் அவர் குடும்ப உறவில் முழுமையான ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகிறார்.

கர்ப்பமாக இருக்கிறாரா

கர்ப்பமாக இருக்கிறாரா

நடிகை காஜல் அகர்வால் கர்ப்பமாக உள்ளார் என்கிற வதந்திகள் சமூக வலைதளத்தில் வெகுவாக வலம் வரத் தொடங்கியுள்ளன. அதற்கு காரணம் நாகார்ஜுனா படத்தில் இருந்து திடீரென காஜல் அகர்வால் வெளியேறியது மற்றும் புதிய படங்களில் அவர் ஒப்பந்தம் ஆகாமல் இருப்பதை பார்த்து கர்ப்பம் காரணமாகத்தான் சினிமாவுக்கு சின்ன பிரேக் கொடுக்க காஜல் நினைத்துள்ளாரா? என்கிற சந்தேகம் கிளம்பி உள்ளது.

இந்தியன் 2வில் இல்லையா

இந்தியன் 2வில் இல்லையா

மேலும், இந்தியன் 2 படத்தில் இருந்தும் நடிகை காஜல் அகர்வால் விலகப் போவதாகவும் அவருக்கு பதிலாக வேறு ஒரு முன்னணி நடிகையை நடிக்க வைக்க இயக்குநர் ஷங்கர் ஆலோசித்து வருவதாகவும் தகவல்கள் வெளியான நிலையில், காஜல் அகர்வால் கன்ஃபார்மாக கர்ப்பமாகத் தான் உள்ளார் என்றே பலரும் பேச ஆரம்பித்து விட்டார்கள்.

Recommended Video

Kajal Agarwal சினிமாவிலிருந்து வெளியேறுகிறார்? | Kajal தரப்பு விளக்கம் | #KajalQuitsCinema
தங்கையின் ஆசை

தங்கையின் ஆசை

சமீபத்தில் முதலாம் ஆண்டு திருமண நாளை காஜல் அகர்வால் கொண்டாடிய நிலையில், அவருடைய தங்கையும் முன்னாள் நடிகையுமான நிஷா அகர்வால் சீக்கிரமே அக்கா குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்கிற ஆசையை வெளிப்படுத்தி இருந்தார். நடிகை காஜலும் சினிமாவில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலக அந்த சந்தேகம் வலுவடைந்தது.

காஜல் பதில்

காஜல் பதில்

இந்நிலையில், சமீபத்தில் ஆன்லைன் போர்ட்டல் ஒன்றுக்கு பேட்டியளித்த நடிகை காஜல் அகர்வால் விவாகரத்து வதந்திகள் குறித்த கேள்விக்கு இப்போதைக்கு எதுவும் சொல்றதுக்கு இல்லை. சரியான நேரம் வரட்டும் அதற்கான பதிலை சொல்கிறேன் என ஃபுல் ஸ்டாப் வைக்காமல் தொடர் புள்ளி வைத்திருப்பது மேலும், ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தி உள்ளது.

இப்பவே அம்மா தான்

இப்பவே அம்மா தான்

மேலும், தங்கையின் குழந்தையை கொஞ்சி விளையாடும் காஜல் அகர்வால் இப்போதே தாய்மையை உணர்வதாகவும் கூறியுள்ளார். காஜல் அகர்வால் மற்றும் கெளதம் தங்கள் வீட்டில் வளர்த்து வரும் செல்ல நாய்க்குட்டி மியாவுக்கும் காஜல் அகர்வால் அம்மாவாகவே இருந்து பாசம் காட்டி வருகிறாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X