ஆண் குழந்தைக்கு அம்மாவான காஜல் அகர்வால்.. மகனுக்கு என்ன பெயர் வைச்சிருக்காங்க தெரியுமா?

சென்னை: நடிகை காஜல் அகர்வால் அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்து நேற்று (ஏப்ரல் 19) அம்மாவாகி உள்ளார்.

Recommended Video

Kajal Aggarwalக்கு ஆண் குழந்தை | மகனுக்கு என்ன பெயர் வைச்சிருக்காங்க தெரியுமா?

இந்நிலையில், ஆண் குழந்தைக்கு என்ன பெயர் வைத்திருக்கிறோம் என்பதை காஜல் அகர்வாலின் கணவர் கெளதம் கிச்சுலு தனது சமூக வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளார்.

செம க்யூட்டான அறிவிப்புடன் தனது மகனின் பெயரை ரிவீல் செய்துள்ளார் கெளதம் கிச்சுலு.

அம்மாவான காஜல் அகர்வால்

அம்மாவான காஜல் அகர்வால்

இந்த ஆண்டு புத்தாண்டை முன்னிட்டு தான் கர்ப்பமாக இருக்கும் சந்தோஷமான செய்தியை சமூக வலைதளத்தில் அறிவித்து தனது கணவர் கெளதம் கிச்சுலுவை கொஞ்சி தீர்ந்திருந்தார் நடிகை காஜல் அகர்வால். லாக்டவுன் நேரத்தில் புதிய படங்கள் ஷூட்டிங் நடைபெறாமல் இருந்த நிலையில், சட்டு புட்டென திருமணம் செய்து கொண்டு அழகான குழந்தையையும் பெற்றெடுத்துள்ளார் காஜல் அகர்வால்.

ஆண் குழந்தை

ஆண் குழந்தை

ஏப்ரல் 19ம் தேதியான நேற்று நடிகை காஜல் அகர்வாலுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. தாயும் சேயும் நலம் என்கிற சந்தோஷமான அறிவிப்பு வெளியானதும் சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் காஜல் அகர்வாலையும் புதிதாக பூமிக்கு வந்துள்ள அவரது மகனையும் வாழ்த்தி வருகின்றனர்.

பெயர் வச்சாச்சு

பெயர் வச்சாச்சு

இன்னமும் அந்த குழந்தையின் அழகிய புகைப்படத்தை வெளியிடாமல் உள்ளனர் காஜல் அகர்வால் மற்றும் கெளதம் கிச்சுலு. இந்நிலையில், குழந்தைக்கு வைத்துள்ள பெயரை தனது சமூக வலைதளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் அப்பா கெளதம் கிச்சுலு. குழந்தையின் பெயர் செம க்யூட்டாக இருக்கு என பலரும் பாராட்டி வருகின்றனர்.

என்ன பெயர்

என்ன பெயர்

நீல் கிச்சுலு (Neil Kitchlu) என காஜல் அகர்வால் மற்றும் கெளதம் கிச்சுலுவின் குழந்தைக்கு பெயர் வைத்துள்ளனர். நீல் என்றால் வெற்றி என்று அர்த்தம் என கூறுகின்றனர். கத்தி பட வில்லன் பெயர் நீல் நிதின் முகேஷ் என்பது குறிப்பிடத்தக்கது. பாலிவுட்டில் இதே பெயரில் பல நடிகர்கள் மற்றும் பிரபலங்கள் உள்ளனர்.

போட்டோ போடுங்க

போட்டோ போடுங்க

மகனுடன் காஜல் அகர்வால் மற்றும் கெளதம் கிச்சுலு இருக்கும் அழகான போட்டோவை சீக்கிரம் போடுங்க என ரசிகர்கள் பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர். விரைவில் மகனின் பெயர் சூட்டு விழா புகைப்படங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில், பேபி பம்ப் போட்டோக்களை காஜல் அகர்வால் ஷேர் செய்து வைரலாக்கி இருந்தார்.

ராம்சரண் படம் வருது

ராம்சரண் படம் வருது

நடிகர் ராம்சரண் மற்றும் அவரது அப்பா சிரஞ்சீவி நடிப்பில் உருவாகி உள்ள ஆச்சார்யா திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. மகதீரா படத்தில் ராம்சரணுக்கு ஜோடியாக நடித்திருந்த காஜல் அகர்வால் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம். சமீபத்தில் வெளியான ஹே சினாமிகா படம் சரியாக போகாத நிலையில், ஆச்சார்யா படம் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் அடிக்கும் என எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X