கொல்றீங்களே காஜல்.. மாலத்தீவில் ஹனிமூன் ஆட்டம்.. இளைஞர்களை இப்படி திணறவிடுறாரே!

சென்னை: கோமாளி படத்திற்கு பிறகு இயக்குநர் ஷங்கரின் இந்தியன் 2 படத்தில் நடித்து வந்த காஜல் அகர்வால், கொரோனா லாக்டவுன் காரணமாக ஷூட்டிங் நிறுத்தப்பட்டதால், விடுமுறையில், தனது பெற்றோர்களுடன் மும்பையில் வசித்து வந்தார்.

மும்பையை சேர்ந்த தொழிலதிபர் கவுதம் கிட்சிலுவுடன் ஏற்பட்ட காதல் காரணமாக, கடந்த மாதம் அக்டோபர் 30ம் தேதி திருமணம் செய்து கொண்டார்.

தற்போது மாலத்தீவில் ஹனிமூன் கொண்டாடி வரும் காஜல், தொடர்ந்து ஏகப்பட்ட போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு ரசிகர்களை திணறவிட்டு வருகிறார்.

பிரம்மாண்ட வளையல்

பிரம்மாண்ட வளையல்

மும்பையில் உள்ள தாஜ் ஹோட்டலில் நெருங்கிய சொந்தங்கள் 50 பேருடன் கொரோனா பரிசோதனை மற்றும் பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டு நடிகை காஜல் அகர்வால் மற்றும் கவுதம் கிட்சிலுவின் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்காக காஜல் அணிந்திருந்த சிகப்பு நிற லெஹங்காவும், கைகளில் விளக்குகள் தொங்குவது போல இருந்த பிரம்மாண்ட வளையல்களும் ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தியது.

மாலத்தீவு கடற்கரை

மாலத்தீவு கடற்கரை

கொரோனா காலத்தில் சுற்றுலா செல்வதை எல்லாம் யாருமே கை விடுவதே இல்லை. மாலத்தீவுக்கு தனது கணவருடன் தேனிலவு சென்றுள்ள காஜல் அகர்வால், சிகப்பு நிற கவுன் அணிந்தபடி மாலத்தீவு கடற்கரையில் தனது காதல் கணவருடன் ரொமான்ஸ் செய்யும் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை நல்லாவே வெறுப்பேற்றி வருகிறார்.

கொல்றீங்களே காஜல்

கொல்றீங்களே காஜல்

கான்ரட் மாலத்தீவின் ரங்காலி தீவில் சொகுசு ரெசார்ட்டில் தனது ஹனிமூனை கொண்டாடி வரும் காஜல் அகர்வால், தொடர்ந்து ஏகப்பட்ட ஹாட் போட்டோக்களை போட்டு, இளைஞர்களை இம்சை பண்ணி வருகிறார். கொள்ளை அழகில் கொல்றீங்களே காஜல் அகர்வால் என கமெண்ட்டுகளும் லைக்குகளும் பறக்கின்றன.

கடலுக்கு நடுவே

கடலுக்கு நடுவே

நடிகை காஜல் அகர்வால் இருக்கும் ரெசார்ட், கடலுக்கு நடுவே கட்டப்பட்டது போல தெரிகிறது. கண்ணாடி பால்கனியில் குட்டி டிராயர் மற்றும் டாப்ஸ் அணிந்து அவர் கொடுத்துள்ள செம கிக்கேற்றும் போஸ், ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளது. நல்லா என்ஜாய் பண்றீங்க, எங்களுக்கு வருத்தம் தான் என ஏகப்பட்ட கமெண்ட்டுகள் குவிகின்றன.

லைக்ஸ் அள்ளுது

லைக்ஸ் அள்ளுது

காஜல் அகர்வால் தேனிலவுக்காக தங்கியிருக்கும் ரெசார்ட்டை பார்த்த உடன் ரசிகர்கள் நிச்சயம் வியப்பில் விழுந்து விடுவார்கள். கவுதம் கிட்சிலு ஸ்டோரிஸ் என்ற டேக்குடன் காஜல் அகர்வால் தொடர்ந்து தனது இன்ஸ்டா ரசிகர்களுக்கு கவர்ச்சி தீனி கொடுத்து வருகிறார். எல்லா புகைப்படங்களும், 2 முதல் 5 லட்சங்கள் வரை லைக்குகளை அள்ளி வருகின்றன.

Recommended Video

Indian 2 விபத்து நடந்த இடத்தில் மீண்டும் படபிடிப்பு? Kamal Hassan Press Meet
எப்போ ஷூட்டிங்

எப்போ ஷூட்டிங்

திருமண வாழ்க்கையில் முழுதாக மூழ்கிப் போயுள்ள காஜல் அகர்வால், எப்போ ஷூட்டிங் திரும்புவார் என்கிற கேள்விகளையும் ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர். துல்கர் சல்மான் உடன் பிருந்தா மாஸ்டர் இயக்கவுள்ள ஹே சினாமிகா மற்றும் கமல்ஹாசனின் இந்தியன் 2 என இரு படங்களில் காஜல் அகர்வால் ஒப்பந்தமாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X