இது எதுக்கு? இந்தப் பக்கம் களறிபயட்டு... அந்த பக்கம் செஸ்... புது ரூட்டில் நடிகை காஜல் அகர்வால்!
சென்னை: எப்போதும் புதிய விஷயங்களை கற்றுக்கொண்டிருப்பேன் என்று தெரிவித்துள்ளா நடிகை காஜல் அகர்வால்.
Recommended Video
தமிழில், பொம்மலாட்டம், நான் மகான் அல்ல, மாற்றான், துப்பாக்கி, பாயும் புலி, ஜில்லா உட்பட பல படங்களில் நடித்திருப்பவர் காஜல் அகர்வால்.
தமிழ் தவிர, இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். அடுத்து நடித்துள்ள, பாரிஸ் பாரிஸ் படம் ரிலீஸ் ஆக இருக்கிறது.

ஹே சினாமிகா
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் ஜோடியாக இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். நடிக்கிறார். இந்தியில் மும்பை சாகா என்ற படத்தில் நடித்துள்ளார். நடன இயக்குனர் பிருந்தா மாஸ்டர் இயக்கும் ஹே சினாமிகா படத்திலும் நடித்து வருகிறார். இதில் துல்கர் சல்மான் ஹீரோ. இன்னொரு ஹீரோயினாக அதிதி ராவ் ஹைதாரி நடிக்கிறார்.

த்ரிஷா விலகிய படம்
இதற்கிடையே தெலுங்கில் சிரஞ்சீவி நடிக்கும் படத்தில் இருந்து நடிகை த்ரிஷா விலகியதை அடுத்து, அந்த படத்திலும் நடிக்க காஜல் அகர்வால் ஒப்பந்தமாகி உள்ளார். இந்தியன் 2 படப்பிடிப்பில், விபத்து நடந்தபோது, மயிரிழையில் உயிர் தப்பியவர்களில் இவரும் ஒருவர். அந்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளவில்லை என்று அவர் சமீபத்தில் கூறியிருந்தார்.

புத்தகங்கள்
இதற்கிடையே, தற்காப்பு கலையான களறிபயட்டு மற்றும் செஸ் விலையாட்டைக் கற்றுக் கொண்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார், காஜல் அகர்வால். ' தனிமையில் இருக்கிறேன் என்று ஒரு போதும் கவலைபட மாட்டேன். எப்போதும் என் நேரத்தை பிசியாக வைத்துக்கொள்வேன். படப்பிடிப்பு இல்லை என்றால் புத்தகங்கள் படிப்பேன். மற்றும் புதிய விஷயங்களை கற்றுக் கொண்டிருப்பேன்.

களறிபயட்டு
மன மற்றும் உடல் ரீதியான நடவடிக்கைகளையும் மேற்கொள்வேன். இப்போது செஸ் கற்றுக் கொண்டிருக்கிறேன். சின்ன வயதிலேயே செஸ் விளையாடுவேன் என்றாலும் இப்போது கற்பது டைம் பாஸுக்காக அல்ல. அடுத்த லெவலுக்குச் செல்வதற்காக. அதோடு தற்காப்புக் கலையான களறிபயட்டுவை கற்றுவருகிறேன். இது புது அனுபவமாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











