'புயலுக்கு முன்னே..' திருமண டிரெஸ்சை அங்க மாட்டி.. 'கல்யாண பொண்ணு' காஜல் போட்ட கேப்ஷனை பாருங்க!
சென்னை: நடிகை காஜல் அகர்வால், தொழிலதிபர் கவுதம் கிட்சிலு திருமண நிகழ்ச்சிகள் தொடங்கியுள்ளன.
நடிகை காஜல் அகர்வால், தொழிலதிபர் கவுதம் கிட்சிலு திருமணம் இன்னும் சில மணி நேரங்களில் நடக்க இருக்கிறது.
இதற்கான ஏற்பாடுகளை கடந்த 20 நாட்களுக்கு முன்பே இரண்டு பேர் குடும்பத்தினரும் தொடங்கிவிட்டனர்.

ஹேய் சினாமிகா
நடிகை காஜல் அகர்வால், தமிழ், தெலுங்கு, இந்தி மொழி படங்களில் நடித்து வருகிறார். தமிழில், நான் மகான் அல்ல, மாற்றான், துப்பாக்கி, மாரி, ஜில்லா உட்பட பல படங்களில் நடித்துள்ளார். இப்போது இந்தியன் 2, ஹேய் சினாமிகா படங்களில் நடித்து வருகிறார். இந்தியில், மும்பை சாகா என்ற படத்தில் நடித்துள்ளார்.

ஆசிர்வாதமும் வாழ்த்தும்
இவர், கடந்த சில நாட்களுக்கு முன், திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தனது சமூக வலைதளப்பக்கத்தில் மகிழ்ச்சியுடன் அறிவித்திருந்தார். தொழிலதிபர், கவுதம் கிட்சிலுவுடன் தனது திருமணம் 30 ஆம் தேதி நடக்க இருக்கிறது என்றும் உங்கள் வாழ்த்துகளும் ஆசிர்வாதங்களும் தேவை என்றும் கூறியிருந்தார்.

மெகந்தி, ஹால்தி
அதன்படி இவர்கள் திருமணம் இன்று நடக்கிறது. தனது இன்ஸ்டாவில் திருமணத்துக்கு முன் நடக்கும் விழாக்களின் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார் காஜல் அகர்வால். அவர் வீட்டில் நேற்று மெகந்தி மற்றும் ஹால்தி விழா நடைபெற்றது. அதன் புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார்.

சில மணி நேரங்களில்
பின்னர் அவர் நடனம் ஆடும் வீடியோவையும் வெளியிட்டிருந்தார். முன்னதாக விஜயதசமியை முன்னிட்டு தனது வருங்கால கணவருடன் ரொமான்ஸ் லுக்கில் இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டிருந்தார். அது வைரலானது. இவர்கள் திருமணம் இன்னும் சில மணி நேரங்களில் நடக்க இருக்கிறது.

ஹேங்கரில் உடை
கொரோனா காரணமாக நெருங்கிய சொந்தங்கள் மற்றும் நண்பர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, நடிகை காஜல் அகர்வால், திருமண உடையை ஹேங்கரில் மாட்டியபடி, அதன் முன் கைகளை ஒன்றாக கட்டியபடி அமர்ந்திருக்கும் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.

புயலுக்கு முன்னே
அள்ளும் மேக்கப் அப்படியே தெரிகிறது. இதற்கு கேப்ஷனாக, புயலுக்கு முன்னே அமைதி என்று பதிவு செய்துள்ளார். இந்த போட்டோ வைரலாகி வருகிறது. தமன்னா, சமந்தா உள்பட நடிகைகளும் ஏராளமான ரசிகர்களும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











