தென்னிந்திய சினிமா ஒதுக்குகிறது.. அந்த விஷயத்தில் நயன்தாரா சூப்பர்.. காஜல் அகர்வால் பேட்டி!
சென்னை: பாலிவுட் சினிமாவிற்கும் தென்னிந்திய சினிமாவிற்கும் இடையே நிறைய பாகுபாடு உள்ளது. தென்னிந்திய சினிமா ஒரு நடிகைக்கு திருமணமாகிவிட்டால், அவர் சினிமாவிற்கு லாயக்கு இல்லை என்று ஒதுக்கிவிடுகிறது, அந்த நிலைமாற வேண்டும் என்று நடிகை காஜல் அகர்வால் ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.
பிரபலமான நாயகியாக வலம் வருபவர் நடிகை காஜல் அகர்வால். இவர், 2008ம் ஆண்டு பரத்தின் பழனி படத்தின் மூலம் தமிழில் தனது அறிமுகத்தை கொடுத்தார். ஆனால், அந்த படம் பெரிதாக வரவேற்பை பெறவில்லை. இதையடுத்து, தெலுங்கு பக்கம் சென்ற காஜல், ராம்சரணுடன் மகதீரா படத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய பெயரை பெற்றுத்தந்தது. மகதீரா படத்தின் வெற்றிக்குப்பிறகு முன்னணி நடிகை என பெயர் எடுத்த காஜல் அகர்வால், விஜய்க்கு ஜோடியாக துப்பாக்கி, ஜில்லா படத்தில் நடித்தார். மேலும், அஜித், சூர்யா, தனுஷ் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் தனக்கென தனி இடத்தை பிடித்தார்.

திருமணம்: டாப் நடிகையாக பிஸியாக வலம் வந்து கொண்டிருந்த காஜல் அகர்வால் 2020ஆம் ஆண்டு மும்பை தொழிலதிபர் கவுதம் கிச்சலு என்பவரை பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்துக்கொண்டார். இவரின் திருமணம் கொரோனா காலகட்டத்தில் நடந்ததால், இதில், நெருங்கிய நண்பர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். இந்த தம்பதிகளுக்கு நீல் என்ற மகன் உள்ளார். தனது மகனின் போட்டோவை அவ்வப்போது காஜல் அகர்வால் இணையத்தில் ஷேர் செய்து வருகிறார்.
ஒதுக்குகிறார்கள்: குழந்தை பிறப்பிற்கு பிறகு படங்களில் பிஸியாக நடித்து வரும் காஜல் அகர்வால் அளித்துள்ள பேட்டியில் பாலிவுட் சினிமாவிற்கும் தென்னிந்திய சினிமாவிற்கும் இடையே நிறைய பாகுபாடு உள்ளது. இந்தியில் ஷர்மிர்ளா தாகூர், ஹேமா மாலினி போன்றோர் திருமணத்திற்கு பிறகும் கதாநாயகியாக நடித்தனர். இப்போதும் இந்தி சினிமாவில் திருமணமான தீபிகா படுகோனே, ஆலியாபட் ஆகியோரும் நல்ல கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். ஆனால், தென்னிந்திய சினிமாவில் திருமணமான நடிகைகளுக்கு வாய்ப்பு கிடைப்பது இல்லை.
இந்த விஷயத்தில் நயன்தாரா விதிவிலக்காக இருக்கிறார். அவருடைய படங்களின் தேர்வும், கதைத் தேர்வும் எனக்கு பிடித்த விஷயம், திருமணமான நடிகைகளை தென்னிந்திய சினிமா ஓரம் கட்டுகிறது. இந்த நிலைமையை விரைவில் மாற்றுவோம். இந்த தலைமுறை நடிகைகள் திருமணமாகி குழந்தை பெற்ற பிறகும் நடிக்க வருகிறார்கள். ரசிகர்களின் பார்வையும் மாறி இருக்கிறது. நல்ல கதையம்சம் உள்ள படங்களில், யார் நடித்தாலும் அவர்கள் ரசித்து பார்க்கிறார்கள் என்றார்.


Click it and Unblock the Notifications











