Just In
- 47 min ago
மாலத்தீவில் இருந்து போட்டோ போட்ட வனிதா.. ஆபாசமாய் கேள்வி கேட்ட நெட்டிசன்ஸ்!
- 1 hr ago
ஒரே மஜா தான் போல.. மாலத்தீவில் மல்லாக்கப் படுத்துக்கிட்டு போஸ் கொடுக்கும் பிக் பாஸ் பிரபலம்!
- 1 hr ago
டைம் சரியில்லை.. பாண்ட் படமான 'நோ டைம் டு டை' ரிலீஸ் மீண்டும் தள்ளிவைப்பு.. ரசிகர்கள் ஏமாற்றம்!
- 1 hr ago
பாலாவின் திரைப்படத்தில் வில்லனாக நடிக்கும் பிரபல இளம் நடிகர்!
Don't Miss!
- Finance
Budget 2021.. WFHல் இருக்கும் ஊழியர்களுக்கு வரி விலக்கு அளிக்கலாம்.. PwC சொன்ன செம விஷயம்..!
- Sports
ப்ரீத்தி ஜிந்தாவிற்கு என்னாச்சு.. எதுக்கு இந்த தப்பான முடிவு.. ரசிகர்களுக்கு ஷாக் தந்த பஞ்சாப் அணி!
- Education
ரூ.65 ஆயிரம் ஊதியத்தில் கடலூர் மாவட்ட ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா?
- News
"திக் திக்" அதிமுக.. ஒருவேளை சசிகலா ரிலீஸ் ஆவது டிலே ஆச்சுன்னா.. வெளியானது "புது தகவல்"!
- Lifestyle
இந்திய குடியரசு தினம் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்!
- Automobiles
மைலேஜை வாரி வழங்கும்... ஹைபிரிட் திறனில் வருகிறது புதிய ஹோண்டா சிட்டி... எப்போது அறிமுகம்? கசிந்த தகவல்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஆதியோகியே காப்பாற்று.. இந்தியன் 2 விபத்து அதிர்ச்சியில் இருந்து மீள ஈஷா யோகா மையம் சென்ற காஜல்!
சென்னை: இந்தியன் 2 ஷூட்டிங் ஸ்பாட்டில் கிரேன் அறுந்து விழுந்த விபத்தில் 3 பேர் பலியாகிய சம்பவம், நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அந்த சம்பவத்தில், நடிகர் கமல்ஹாசன், காஜல் அகர்வால் மற்றும் இயக்குநர் ஷங்கர் மயிரிழையில் உயிர் தப்பியதாக தகவல்கள் வெளியாகின.
நடிகை காஜல் அகர்வால், அந்த அதிர்ச்சியில் இருந்து மீள, மகா சிவராத்திரியான நேற்று, ஈஷா யோகா மையத்தில் உள்ள ஆதியோகியை வழிபட்டுள்ளார்.
ஃபீல் தி ஹீட்... உள்ளாடையுடன் ஆண் நண்பருடன் நடிகை செக்ஸி டான்ஸ்.. கேப்ஷனே வேற மாதிரி இருக்கு!
|
உயிர் தப்பிய காஜல்
கடந்த பிப்ரவரி 19ம் தேதி இரவு, பூந்தமல்லி அருகே உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில், இந்தியன் 2 ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த விபத்தில், மது சூதனன், கிருஷ்ணா மற்றும் சந்திரன் ஆகிய மூவர் பரிதாபமாக உயிரிழந்தனர். ராட்சத கிரேன் அறுந்து விழுந்த விபத்தில், ஒரு நிமிட இடைவெளியில் தான் தப்பியதாகவும், அந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியவில்லை எனவும் நடிகை காஜல் தெரிவித்திருந்தார்.
|
மகா சிவராத்திரி
இந்நிலையில், மகா சிவராத்திரியான நேற்று வெள்ளியங்கிரியில் உள்ள ஈஷா யோகா மையத்தில் உள்ள ஆதியோகி சிவனை வணங்கி மன அமைதி தேடி உள்ளார் நடிகை காஜல். இரவு முழுவதும், கண் விழித்து சிவனை பிரார்த்தனை செய்துள்ளார். ஆதியோகி சிவனுடன் எடுத்த செல்ஃபி புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
|
சிவன் காப்பாற்றுவார்
நடிகை காஜல் அகர்வால், தனது ட்விட்டர் பக்கத்தில், இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட புகைப்படத்தின் லிங்கை பகிர்ந்து, சிவ மந்திரத்தையும் ட்வீட் போட்டிருந்தார். அவரது ட்வீட்டை பார்த்த ரசிகர்கள், மகா சிவராத்திரி நல்வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த ரசிகர், டேக் கேர் மேடம், சிவன் உங்களை காப்பாற்றுவார் என பதிவிட்டுள்ளார்.
|
என்ன அழகுடா
ஆதியோகி சிலையுடன் காஜல் அகர்வால் எடுத்த செல்ஃபி புகைப்படம், சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. காஜல் அகர்வாலின் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர் ஒருவர், "என்ன அழகுடா என் செல்லம்.. அழகுல அந்த சிலையே தோத்துடுச்சு" என வேற லெவலில் கமெண்ட் செய்துள்ளார்.
|
ரவுடி பேபி
காஜல் அகர்வாலின் இந்த செல்ஃபி புகைப்படம், இன்ஸ்டாகிராமில் சுமார் 6 லட்சம் லைக்குகளை நெருங்கி உள்ளது. மேலும், காஜல் அகர்வாலின் ட்வீட்டுக்கு கீழே, ரசிகர்கள் மகா சிவராத்திரி வாழ்த்துக்களை தெரிவித்தும், காஜலை வர்ணித்தும் வருகின்றனர். இந்த நெட்டிசன், மை டியர் ரவுடி பேபி. என்றும் உம்மா கொடுத்தும் கமெண்ட் செய்துள்ளார்.