மண் தொட்ட பிஞ்சு பாதம்..மகனின் புகைப்படத்தை பகிர்ந்த காஜல் அகர்வால்!

சென்னை : நடிகை காஜல் அகர்வால் தனது குழந்தையின் இரு பாதங்கள் மட்டுமே தெரியும் உள்ள புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

தென்னிந்திய மொழிகளில் பிரபலமான நாயகியாக வலம் வந்தவர் காஜல் அகர்வால். கடந்த 2008ம் ஆண்டு பரத்தின் பழனி படத்தின் மூலம் தமிழில் தனது அறிமுகத்தை கொடுத்தார். ஆனால், அந்த படம் பெரிதாக வரவேற்பை பெறவில்லை.

இதையடுத்து, தெலுங்கு பக்கம் சென்ற காஜல், ராம்சரணுடன் மகதீரா படத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய பெயரை பெற்றுத்தந்து வசூலில் சாதனை படைத்தது.

காஜல் அகர்வால்

காஜல் அகர்வால்

மகதீரா படத்திற்கு வெற்றிக்குப்பிறகு முன்னணி நடிகை என பெயர் எடுத்த காஜல் அகர்வால், விஜய்க்கு ஜோடியாக துப்பாக்கி, ஜில்லா படங்களில் நடித்தார். போலீஸ் உமனாகவும், ஸ்போர்ட்ஸ் கேர்ளாகவும் இவர் நடித்து ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றிருந்தார். மேலும், அஜித், சூர்யா, தனுஷ் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் தனக்கென தனி இடத்தை பிடித்தார்.

திருமணம்

திருமணம்

படங்களில் பிஸியாக வலம் வந்து கொண்டிருந்த காஜல் கடந்த 2020ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கவுதம் கிச்சலு என்பவரை பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்துக்கொண்டார். இவர்களது ஹனிமூன் புகைப்படங்களும், ரொமாண்டிக் புகைப்படங்களை அவ்வப்போவது சோஷியல் மீடியாவில் வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தினார்.

அழகான ஆண்குழந்தை

அழகான ஆண்குழந்தை

திருமணத்திற்கு பிறகும் படங்களில் பிஸியாக நடித்துவந்த காஜல் அகர்வால் கர்ப்பகால போட்டோஷூட் நடத்தி ரசிகர்களுக்கு தான் கர்ப்பமாக இருப்பதை அறிவித்தார். இதையடுத்து, கடந்த ஏப்ரல் மாதம் காஜல் அகர்வால் கிச்லு தம்பதிக்கு இறைவனின் ஆசிர்வாதத்துடன் அழகான ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு நீல் என பெயர் வைத்துளள்ளனர்.

அழகான பாதம்

அழகான பாதம்

இந்நிலையில், காஜல் அகர்வால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குழந்தையின் இரண்டு பாதம் தெரியும்படி இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். மேலும் அந்த புகைப்படத்திற்கு கேப்ஷனாக நீலின் முதல் விடுமுறை பயணம் லீலா கோவா கடற்கரை என குறிப்பிட்டு, குழந்தை கடற்கரை மணலில் கால் வைத்துள்ளது போல இருக்கும் போட்டோவை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு தற்போது லைக்குகள் குவித்து வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X