மாஸ்க் கூட மேட்சிங் மேட்சிங்தான்.. திருமணத்துக்குப் பின் காஜல் வெளியிட்ட ரொமான்ஸ் ஸ்டில்ஸ்!

By

சென்னை: நடிகை காஜல் அகர்வால் திருமணத்துக்குப் பின் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

நடிகை காஜல் அகர்வால், மும்பை தொழிலதிபர் கவுதம் கிட்சிலுவை காதலித்து வந்தார்.

இருவீட்டு குடும்பத்தினரும் சம்மதித்ததை அடுத்து திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.

அலங்காரம் செய்பவர்

அலங்காரம் செய்பவர்

அதன்படி இவர்கள் திருமணம் அக்டோபர் 30 ஆம் தேதி மும்பையில் கோலாகலமாக நடந்தது. நெருங்கிய சொந்தங்கள் மற்றும் நண்பர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். காஜல் மணந்திருக்கும் கவுதம் கிட்சிலு, உள் அலங்கார நிபுணர். வீடுகளுக்கும், அலுவலகங்களுக்கும் உள் அலங்காரம் செய்து கொடுப்பவர்.

தொடர்ந்து நடிக்க

தொடர்ந்து நடிக்க

திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து நடிக்க இருப்பதாகக் கூறியுள்ள காஜல், திருமணம் முடிந்த கையோடு, புதிய வீட்டில் குடியேறியுள்ளார். இதற்கான கிரகப்பிரவேசம் கடந்த சில நாட்களுக்கு முன் நடந்துள்ளது. இதில் நடிகை காஜல் அகர்வால், கவுதம் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

மஞ்சள் நிற சேலை

மஞ்சள் நிற சேலை

திருமணம் குறித்த தகவல் மற்றும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் அடிக்கடி வெளியிட்டு வந்த காஜல், இப்போது நிச்சயதார்த்தத்தின் போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். மஞ்சள் நிற சேலை அணிந்த கணவர் கவுதமுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.

ஆடை வடிவமைப்பாளர்

ஆடை வடிவமைப்பாளர்

இந்த புடவையை பிரபல திரைப்பட ஆடை வடிவமைப்பாளர் மணிஷ் மல்ஹோத்ரா அமைத்துள்ளார். மஞ்சள் நிற சேலையில் இருக்கும் நடிகை காஜல், மாஸ்க் கூட மஞ்சள் நிறத்தில் அணிந்துள்ளார். இதையடுத்து மாஸ்கும் மேட்சிங்கா? என்று சிலர் கேட்டுள்ளனர்.

சோசியல் டிஸ்டன்ஸ்

சோசியல் டிஸ்டன்ஸ்

பல ரசிகர்கள் வழக்கம்போல வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். சிலர் கிண்டலாக, சோசியல் டிஸ்டன்ஸ் முக்கியம். கவுதம்கிட்ட இருந்து விலகியே இருங்க என்று கூறியுள்ளனர். பல நெட்டிசன்ஸ் அவர் அழகை புகழந்து தள்ளியுள்ளனர். இந்தப் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X