வரும் 30-ல் திருமணம்.. முதன் முறையாக வருங்கால கணவருடன் நடிகை காஜல் அகர்வால் ரொமான்ஸ் போஸ்!

By

சென்னை: வரும் 30 ஆம் தேதி திருமணம் நடைபெற இருக்கும் நிலையில் தனது வருடங்கால கணவருடன் இருக்கும் ரொமான்ஸ் போட்டோவை வெளியிட்டுள்ளார் காஜல் அகர்வால்.

தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வருகிறார், நடிகை காஜல் அகர்வால்.

தமிழில், நான் மகான் அல்ல, மாற்றான், துப்பாக்கி, மாரி, ஜில்லா உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.

ஆச்சார்யா ஹீரோயின்

ஆச்சார்யா ஹீரோயின்

இப்போது ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் ஜோடியாக இந்தியன் 2, ஹேய் சினாமிகா படங்களில் நடித்து வருகிறார். இந்தியில், மும்பை சாகா என்ற படத்தில் நடித்துள்ளார். நடன இயக்குனர் பிருந்தா இயக்கும் ஹே சினாமிகா படத்திலும் காஜல் நடிக்கிறார். தெலுங்கில் சிரஞ்சீவி நடிக்கும் ஆச்சார்யா படத்தில் இருந்து த்ரிஷா விலகியதை அடுத்து, அந்த படத்திலும் காஜல் அகர்வால் ஒப்பந்தமாகி இருக்கிறார்.

நடிப்பில் கவனம்

நடிப்பில் கவனம்

காஜல் அகர்வாலின் தங்கை நிஷா அகர்வால் திருமணமாகி செட்டிலாகிவிட்ட நிலையில் காஜலும் திருமணம் செய்துகொள்வார் என்று குடும்பத்தினர் எதிர்பார்த்தனர். ஆனால் அவர், படங்களில் கவனம் செலுத்தி வந்தார். வயதாகிக்கொண்டே செல்வதால், திருமணத்தை விரைவில் முடிக்க பெற்றோர் முடிவு செய்தனர்.

மகிழ்ச்சி அறிவிப்பு

மகிழ்ச்சி அறிவிப்பு

இந்நிலையில் காஜல் அகர்வால், தொழிலதிபர் கவுதம் கிட்சிலுவை திருமணம் செய்துகொள்ள இருப்பதாக தனது சமூக வலைதளப்பக்கத்தில் மகிழ்ச்சியுடன் அறிவித்தார். அதில் கவுதம் கிட்சிலுவுடன் தனது திருமணம் வரும் 30 ஆம் தேதி மும்பையில் நடக்க இருக்கிறது என்று கூறியிருந்தார்.

வீட்டில் எளிமையாக

வீட்டில் எளிமையாக

அங்கு நட்சத்திர ஓட்டல் ஒன்றில் பிரமாண்டமாக திருமணத்தை நடத்த இருப்பதாகக் கூறப்பட்டது. ஆனால், கொரோனா பரவல் அதிகமாகி வருவதால், எளிமையாக நடத்த காஜல் முடிவு செய்துள்ளார். இதனால், மும்பையில் உள்ள தனது வீட்டில் சிம்பிளாக திருமணம் நடக்க இருக்கிறது. இதில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துகொள்ள இருக்கின்றனர்.

தோள் மீது கைபோட்டு

தோள் மீது கைபோட்டு

இந்நிலையில் விஜயதசமியை முன்னிட்டு தனது வருங்கால கணவருடன் ரொமான்ஸ் லுக்கில் இருக்கும் புகைப்படத்தை நடிகை காஜல் அகர்வால் வெளியிட்டுள்ளார். அதில் செம மகிழ்ச்சி மூடில், வருங்கால கணவர் கவுதம் கட்சிலுவின் தோள் மீது கைபோட்டபடி சிரித்துக் கொண்டிருக்கிறார், காஜல் அகர்வால்.

தசரா வாழ்த்து

தசரா வாழ்த்து

ரசிகர்களுக்கு, இருவரும் இணைந்து தசரா வாழ்த்து தெரிவித்துள்ளனர். 'எங்கள் சார்பாக உங்களுக்கு மகிழ்ச்சியான தசாரா வாழ்த்துகள் என்று அவர் கூறியுள்ளார். இதையடுத்து ஏராளமான ரசிகர்களும் அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர். சிலர் இருவரும் சரியான ஜோடி என்று கூறியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X