38 வயசு.. அவ்ளோ பெரிய குழந்தைக்கு அம்மா.. ஆனாலும் இப்படி சிக்கென மாறிட்டாரே காஜல் அகர்வால்!

சென்னை: அடுத்து இந்தியன் 2 படத்திற்காக வெறித்தனமாக காத்திருக்கும் நடிகை காஜல் அகர்வால் தனது உடல் எடையை மொத்தமாக குறைத்து செம்ம ஸ்லிம் ஆக மாறியுள்ள புகைப்படங்களை தற்போது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

கடந்த 2004 ஆம் ஆண்டு இந்தியில் வெளியான கியூன் ஓ கயானா படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் காஜல் அகர்வால். அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய் நடிப்பில் வெளியான அந்த படத்தில் தான் தங்கையாக அறிமுகமானார். அதன் பின்னர் தெலுங்கில் வெளியான லட்சுமி கல்யாணம் படத்தின் ஹீரோயினாக அறிமுகமான காஜல் அகர்வால் 2008 ஆம் ஆண்டு பேரரசு இயக்கத்தில் பரத் நடித்த பழனி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

Kajal Aggarwal shares super slim look in a sleeveless dress pics trending

தெலுங்கு மற்றும் தமிழில் தொடர்ந்து பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக மாறிய காஜல் அகர்வால் அவ்வப்போது சில இந்தி படங்களிலும் நடித்துள்ளார். நடிகர் விஜய்யுடன் இணைந்து துப்பாக்கி, ஜில்லா மற்றும் மெர்சல் என மூன்று படங்களில் நடித்திருந்தார். அஜித்தின் விவேகம் படத்திலும் நடித்த காஜல் அகர்வால் தற்போது கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள இந்தியன் 2 படத்திலும் நடித்துள்ளார்.

Kajal Aggarwal shares super slim look in a sleeveless dress pics trending

திருமணமும் குழந்தையும்: கொரோனா காலத்தில் சினிமா பட வாய்ப்புகள் முடங்கிய நிலையில் திடீரென திருமணத்தை அறிவித்து தொழிலதிபர் கௌதம் கிச்சுலு என்பவரை திருமணம் செய்து கொண்டு காஜல் அகர்வால் தனக்கு பிறந்த ஆண் குழந்தைக்கு நீல் எனப் பெயரையும் சூட்டி இருந்தார். 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 19-ஆம் தேதி காஜல் அகர்வாலுக்கு பிறந்த குழந்தை நன்றாக வளர்ந்து விட்ட நிலையில், தற்போது தனது உடல் எடையை மொத்தமாக குறைத்து சூப்பர் ஸ்டீம் ஆக மாறியுள்ள புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Kajal Aggarwal shares super slim look in a sleeveless dress pics trending

செம்ம ஸ்லிம்: ஆரம்பத்தில் எப்படி இருந்தாரோ காஜல் அகர்வால் அதே போல தனது 38-வது வயதிலும் செம்ம ஸ்லிம் ஆக மாறி நடத்திய போட்டோ ஷூட் புகைப்படங்களை தற்போது வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை மொத்தமாக கவர்ந்துள்ளார். காஜல் அகர்வாலின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒட்டுமொத்தமாக 27 மில்லியன் ரசிகர்கள் உள்ளனர். இந்தியன் 2 மற்றும் இந்தியன் 3 படங்கள் இந்த ஆண்டு வெளியானால் மீண்டும் பிசியான நடிகையாக மாறிவிடுவார்.

பாலைய்யா படத்தில்: கடந்த ஆண்டு நந்தமுரி பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியான பகவந்த் கேசரி படத்திலும் ஹீரோயினாக நடித்திருந்தார் காஜல் அகர்வால். பாலய்யா இவரை ஆன்ட்டி என அழைக்கும் வசனங்கள் இடம்பெற்று காஜல் அகர்வால் ரசிகர்களை பயங்கர கடுப்பில் ஆழ்த்தியது. ஆனால், தற்போது வெளியாகியிருக்கும் போட்டோக்களை பார்த்தால், இனிமேல் காஜல் அகர்வாலை யாருமே அப்படி அழைக்க மாட்டார்கள் என்று ரசிகர்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X