இந்தியன் 3 வரலைன்னா என்ன?.. காஜல் அகர்வாலின் ‘தி இந்தியா ஸ்டோரி’ எப்போ ரிலீஸ் பாருங்க!
சென்னை: ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால் நடித்த இந்தியன் 3 வெளியாக வாய்ப்புகள் ரொம்பவே குறைவு என்றும் மீண்டும் லைகா பணம் போட்டு புரொடக்ஷன் செய்தால் தான் அந்த படம் உருவாகும் என்கின்றனர். இந்நிலையில், காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே ஆகியோர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்துள்ள 'தி இந்தியா ஸ்டோரி' திரைப்படத்தின் டீசர் விரைவில் வெளியாகிறது.
பிரத்யேகமான போஸ்டர் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்த நிலையில், அப்படத்தின் தயாரிப்பாளர்கள் டீசர் வெளியீட்டை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இச்சமூக மற்றும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த படம் ஜூலை 24ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் MIG புரொடக்ஷன் & ஸ்டுடியோஸ் உடன் இணைந்து வழங்கும் இந்தப் படம், ஒரு சமூக மற்றும் தேசிய அளவிலான கதையை உள்ளடக்கியது. ரசாயனப் பொருட்களின் தவறான பயன்பாடு, குறிப்பாக வேளாண்மையில் பூச்சிக்கொல்லி மருந்துகளால் ஏற்படும் அபாயகரமான விளைவுகளை இது கூர்மையாகப் பேசுகிறது.
சேட்டன் DK இயக்கத்தில், சாகர் B. ஷிண்டே கதை எழுதி தயாரித்துள்ள 'தி இந்தியா ஸ்டோரி: ஸ்லோ பாய்சன் இன் ப்ராக்ரஸ்' என்ற முழு தலைப்புடன் இத்திரைப்படம் உருவாகியுள்ளது. பொது சுகாதாரத்தின் மீது இந்த ரசாயனங்களின் தாக்கம் குறித்துப் பேசும் இந்தப் படம், விறுவிறுப்பான கதைக் களம் மற்றும் அழுத்தமான காட்சி அமைப்புகளுக்காக ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.
இது ஒரு தனிப்பட்ட குடும்பத்தின் கதையாக மட்டும் நின்றுவிடாமல், நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கான மக்களின் வாழ்க்கையைப் பாதிக்கும் ஒரு பெரும் நெருக்கடியைப் பிரதிபலிக்கிறது. தொழில்சார் அலட்சியத்தால் உருவாகும் மறைமுகமான பேராபத்துகள் குறித்தும், இவை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் அவசியத்தையும் படம் முன்னிலை படுத்துகிறது.
வெளியாகவுள்ள டீசர், 'தி இந்தியா ஸ்டோரி' கூறும் தீவிரமான உலகை ரசிகர்கள் மேலும் ஆழமாகப் புரிந்துகொள்ள உதவும் என தயாரிப்பாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இது படத்தின் முக்கியமான கதைக்களம் மீதான எதிர்பார்ப்பை நிச்சயமாக அதிகரிக்கும்.
காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இருவரும் முதல்முறையாக இணைந்து திரையில் தோன்றுகின்றனர். இவர்களது அழுத்தமான நடிப்பு, கதைக்கு உணர்வுபூர்வமான ஆழத்தையும், தீவிரத்தையும் பார்வையாளர்களுக்கு சிறப்பாகக் கடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்திற்கு இணைத் தயாரிப்பாளர்களாக சுமித் பாகடே, அனிதா ஜாதவ், விநாயக் சைதானி, கல்பேஷ் ஷா, தேவ்யானி கொராடே மற்றும் பிரேம் ஜோஷி ஆகியோர் பணியாற்றியுள்ளனர். நிஷாந்த் பக்வத் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
மங்கேஷ் தாக்டே இசையமைக்க, ஆஷிஷ் மாத்ரே படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார். ஷகீல் அஜாமி பாடல்களை எழுத, அன்மோல் பாவே ஒலி வடிவமைப்பாளராகப் பங்களித்துள்ளார். இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று முக்கிய மொழிகளிலும் ஒரே நேரத்தில் ஜீ ஸ்டுடியோஸ் மூலம் உலக அளவில் பிரம்மாண்டமாக வெளியிடப்பட உள்ளது.


Click it and Unblock the Notifications